அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மகன் ராபர்ட் டோட் லிங்கன், மூன்று முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்: அவரது சொந்த தந்தையின் மரணம் மற்றும் ஜனாதிபதிகள் ஜேம்ஸ் கார்பீல்ட் மற்றும் வில்லியம் மெக்கின்லியின் படுகொலைகள்.
ஆனால் வரலாற்றின் மிக முக்கியமான நான்கு நிகழ்வுகளில் அப்போஸ்தலனாகிய யோவான் பங்கேற்றிருக்கிறார்: இயேசுவின் கடைசி இராப்போஜனம், கெத்சமெனேயில் கிறிஸ்துவின் பாடுகள், சிலுவையில் அறையப்படுதல் மற்றும் அவரது உயிர்த்தெழுதல். இந்த சம்பவங்களை அவர் நேரில் சாட்சியிட்டதற்கான காரணத்தை யோவான் நன்கு அறிந்திருந்தார். யோவான் 21:24ல் “அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்” என்று யோவான் எழுதுகிறார்.
தன்னுடைய 1 யோவான் நிருபத்தில் யோவான் இதை மறுவுறுதி செய்துள்ளார். அவர் “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1:1) என்று எழுதுகிறார். யோவான் தான் நேரில் கண்ட சாட்சியங்களை எழுதும்படிக்கு ஏவப்படுகிறார். ஏன்? “நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்” (வச. 3) என்று பதிலளிக்கிறார்.
நம் வாழ்வின் நிகழ்வுகள் ஆச்சரியமானதாகவோ அல்லது சாதாரணமானதாகவோ இருக்கலாம், ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் தேவன் அவற்றை ஒழுங்குபடுத்தி நம்மை சாட்சியாய் நிறுத்துகிறார். கிறிஸ்துவின் அருளிலும் ஞானத்திலும் நாம் இளைப்பாறும்போது, வாழ்க்கையின் ஆச்சரியமான தருணங்களிலும் அவருக்காகப் பேசுவோம்.
உங்களுடைய விசுவாச பாதையின் மிகவும் ஆச்சரியமான காரியங்கள் என்னென்ன? தேவனுடைய அன்பைக் கேள்விப்பட விரும்பும் ஒருவருக்கு உங்களுடைய வாழ்க்கைக் கதையை எவ்வாறு பகிர்ந்துகொள்வீர்கள்?
இயேசுவே, நீர் எங்களை எந்த அளவுக்கு நேசிக்கிறீர் என்பதை நான் மற்றவர்களுக்கு அறிவிக்கும்போது ஞானமாய் செயல்பட எனக்கு உதவிசெய்யும்.