கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளில் ஒன்றாக, உல்லாசக் கப்பல்களை நிறுத்தி, பயணிகளை தனிமைப்படுத்தினர். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை சில சுற்றுலாப் பயணிகளின் நேர்காணல்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட இந்த தருணங்கள் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பாய் இருந்தது என்று சொன்ன ஒரு பயணி, தம்முடைய மனைவியைக் குறித்து சொல்லும்போது, அவர் செய்த தப்பிதங்கள் அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிற அவளுடைய ஞாபக சக்தியை வேடிக்கையாய் எடுத்துச் சொன்னார்.
இது போன்ற பதிவுகள் நம்மை சிரிக்க வைக்கலாம், நமது மனிதநேயத்தை நினைவூட்டலாம். நாம் வெளியே சொல்லவேண்டிய விஷயங்களை மிகவும் இறுக்கமாக நமக்குள்ளே வைத்திருக்கும் நம்முடைய சுபாவத்தின் எச்சரிப்பாகவும் இருக்கலாம். ஆயினும், நம்மைத் துன்புறுத்துபவர்களிடம் கனிவாக இருக்க எது நமக்கு உதவுகிறது? சங்கீதம் 103:8-12 நம்முடைய பெரிய தேவனை குறித்து சித்தரிப்பதுபோன்ற எண்ணங்களேயாகும்.
8-10 வசனங்கள் சொல்லுவது கவனத்தில்கொள்ள வேண்டும்: “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.” நாம் ஜெபத்துடன் வேதத்தை வாசிக்கும்போது தேவனுடைய உதவியை நாடுவது என்பது சிலவேளைகளில் அவர்களை தண்டிக்கும் தவறான பாதைக்கு நம்மை திசைதிருப்பலாம். இது நமக்காகவும், நாம் காயப்படுத்த நினைப்பவர்களுக்காகவும் கிருபையோடும் இரக்கத்தோடும் மன்னிப்பை செயல்படுத்துவதற்கு உதவுகிறது.
உங்களுக்கு விரோதமாய் செய்யப்பட்ட தப்பிதங்களுக்காய் யாரை நீங்கள் பழிவாங்கவேண்டும் என்று தூண்டப்படுகிறீர்கள்? உங்களுக்காய் ஜெபிக்கும்படி யாரிடத்தில் கேட்கப்போகிறீர்கள்?
இரக்கம், தயவு, மற்றும் மன்னிப்பின் தேவனே, என்னை வேதனைப்படுத்தியவர்களுக்கு கிருபையையும் இரக்கத்தையும் செயல்படுத்த எனக்கு உதவிசெய்யும்.