சங்கீதம் 120ஐக் குறித்த தம்முடைய நேர்த்தியான விளக்கத்தில், யூஜின் பீட்டர்சன், “நாம் சத்தியம் என்று எதை நம்பியிருந்தோமோ அது பொய் என்ற வலிமிகுந்த உணர்வைப் பெறும்போதே கிறிஸ்தவ விழிப்புணர்வு துவங்குகிறது” என்கிறார். சங்கீதம் 120, எருசலேமுக்கு பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகளால் பாடப்பட்ட “உன்னதப்பாடல்” வரிசையில் (120-134) முதலாவதாய் இடம்பெற்றுள்ளது. பீட்டர்சன் இந்த கருத்தை “ஒரே திசையில் நிலையான கீழ்ப்படிதல்” என்னும் பதிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த சங்கீதங்கள் அனைத்தும் தேவனிடத்தில் கிட்டிசேரும் ஆவிக்குரிய பயணத்தை முன்வைக்கிறது.
நம்முடைய புதுமையான ஒன்றின் தேவையைக் குறித்த ஆழமான விழிப்புணர்வுடன் மட்டுமே துவங்கக்கூடியது. பீட்டர்சன் சொல்லுவதுபோல, “கிறிஸ்தவ பாதையில் ஒருவன் ஈர்க்கப்படுவதற்கு அவன் வெறுக்க பழகவேண்டும்…. கிருபையின் பாதையை தெரிந்துகொள்வதற்கு முன்பு உலகத்தின் பாதைகளை வெறுக்க பழகவேண்டும்.”
நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த உலகத்தைப் பார்த்து நாம் எளிதில் உடைக்கப்பட்டவர்களாயும் சோர்வடைந்தவர்களாயும் கருதக்கூடும். மற்றவர்களுக்கு ஏற்படுகிற தீங்கை இவ்வுலகம் அலட்சியப்படுத்துகிறது. சங்கீதம் 120, இதை தெளிவாய் சொல்லுகிறது: “நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும் போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்” (வச. 7).
நம்முடைய பொய்களிலிருந்து விலக்கி சமாதானத்திற்குள் நடத்தும் நம்முடைய ஒரே உதவும் கன்மலையாகிய நமது இரட்சகரினால், நம்முடைய காயங்கள் அனைத்தையும் புதிய ஆரம்பமாய் மாற்றமுடியும் என்று நம்புவதில் சுகமும் சுதந்திரமும் இருக்கிறது (121:2). இந்த புதிய ஆண்டிற்குள் நாம் நுழையும்போது, அவரையும் அவருடைய வழிகளையும் நாம் நோக்குவோம்.
அபாயகரமான பாதைகளில் நடக்க நீங்கள் எவ்வாறு பழகிக்கொண்டீர்கள்? சுவிசேஷம் எவ்வாறு உங்களை சமாதானத்தின் பாதைக்கு அழைப்புகொடுக்கிறது?
அன்பான தேவனே, உமது ஆவியின் வல்லமையின் மூலம் உமது சமாதானத்தின் வழிகளை எதிர்பார்ப்பதற்கும் அதற்காக கிரியை செய்வதற்கும் எனக்கு உதவிசெய்யும்.