எனது கணவர் எங்கள் மகனின் லிட்டில் லீக் பேஸ்பால் அணிக்கு பயிற்சியளித்தபோது, அந்த ஆண்டின் இறுதியில் பங்கேற்ற வீரர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் முன்னேற்றத்தை ஒத்துக்கொண்டார். அதில் டஸ்டின் என்னும் ஒரு இளம் விளையாட்டு வீரர் என்னிடத்தில் வந்து, “நாங்கள் இன்று விளையாட்டில் தோற்றோமல்லவா?” என்று கேட்டான்.
“ஆம், ஆகிலும் உங்களால் இயன்றதை நீங்கள் செய்தீர்கள் என்று நாங்கள் பெருமையடைகிறோம்” என்று சொன்னேன்.
“எனக்கு புரிகிறது, ஆனாலும் நாங்கள் தோற்றுவிட்டோமல்லவா?” என்று கேட்டான்.
நான் தலையசைத்தேன்.
“ஆனாலும் நான் ஏன் ஜெயித்ததுபோல உணர்கிறேன்?” என்று டஸ்டின் கேட்டான்.
“ஏனென்றால் நீ ஜெயிக்கிறவன்” என்று புன்முறுவலோடு அவனுக்கு பதிலளித்தேன்.
டஸ்டினைப் பொறுத்தவரையில் தன்னால் முடிந்தவரை போராடியும் தோல்வியடைந்துவிட்டால் அது தோல்வியே என்னும் மனப்பான்மையில் இருந்தான். கிறிஸ்தவர்களாகிய நம்முடைய யுத்தம் விளையாட்டு மைதானத்தில் நிறைவடையாது. இருப்பினும், வாழ்க்கையின் கடினமான கட்டத்தை நமது மதிப்பின் பிரதிபலிப்பாகப் பார்க்க அடிக்கடி தூண்டப்படுகிறோம்.
பவுல் அப்போஸ்தலர், தேவனுடைய பிள்ளைகளாகிய நம்முடைய தற்போதைய பாடுகளுக்கும் வரப்போகிற மகிமைக்கும் இருக்கும் தொடர்பை உறுதிசெய்கிறார். இயேசு தம்மையே நமக்காக ஒப்புக்கொடுத்து, பாவத்துடனான நம்முடைய யுத்தத்தில் நமக்காய் யுத்தம் செய்து, அவரைப் போல மாறுவதற்கு தொடர்ந்து நம்மில் கிரியை செய்கிறார் (ரோமர் 8:31-32). நாம் உபத்திரவத்தையும் பாடுகளைகளையும் சந்திக்க நேரிட்டாலும், தேவனுடைய நிலையான அன்பு நம்மை உறுதியாய் நிற்க நமக்கு உதவிசெய்யும் (வச. 33-34).
அவருடைய பிள்ளைகளாய், பாடுகளை மேற்கொள்வதன் நிமித்தம் நம்முடைய சுயமதிப்பை விளங்கச்செய்யலாம். நம்முடைய வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாம் வழியில் தடுமாறலாம், ஆனால் நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் நம்மை அடையாளப்படுத்துவோம் (வச. 35-39).
தேவனுடைய அன்பின் மீதான நம்பிக்கை உங்களை எவ்விதம் தொடர்ந்து ஓடச்செய்கிறது? பெரிய இழப்பிற்கு பின்னும், நீங்கள் அவருடைய பிள்ளைகள் என்னும் உங்களின் மதிப்பை அவர் எவ்விதம் உறுதிசெய்தார்?
தகப்பனே, என்னுடைய பாடுகளின் மத்தியிலும் வெற்றிசிறக்கப்பண்ணியதற்காய் உமக்கு நன்றி.