ஆஸ்திரேலியாவில் இருக்கும் பண்ணை விலங்குகள் மீட்பு நிறுவனத்தின் தன்னார்வல ஊழியர்கள், 34 கிலோ எடைகொண்ட அழுக்கு கம்பளி தோலுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆட்டை மீட்டனர். அந்த ஆடானது ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தொலைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கண்டறிந்தனர். அதன் மேலிருக்கும் இறுகிய கம்பளித் தோலை கவனமுடன் வெட்டியெடுத்தனர். அதன் பாரங்கள் இறக்கிவைக்கப்பட்டு புஷ்டியான ஆகாரத்தை சாப்பிட, அதன் கால்கள் வலுவடையத் துவங்கியது. அதை மீட்டவர்களுடனும் சரணாலயத்தில் இருந்த மற்ற விலங்குகளுடனும் அது பழகுவதை மிகவும் ஆரோக்கியமாய் எண்ணியது.
சங்கீதக்காரன் தாவீது, அதிக பாரத்தைச் சுமந்து தொலைக்கப் பட்டவனாய், மீட்பின் அவசியத்தை எதிர்பார்த்திருக்கும் வேதனையை புரிந்துகொண்டான். சங்கீதம் 38இல், தாவீது தேவனிடத்தில் மன்றாடுகிறான். அவன் தனிமைப்படுத்தப்பட்டவனாய், கைவிடப்படுதலையும் ஆதரவற்ற நிலைமையையும் அனுபவித்தான் (வச. 11-14). ஆகிலும் அவன் விசுவாசத்தோடு, “கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்” என்று ஜெபித்தான். தாவீது அவனுடைய இக்கட்டான சூழ்நிலையையும் மாம்ச பெலவீனத்தையும் மறுக்கவில்லை (வச. 16-20). ஆகிலும் அவனுடைய தேவன் சரியான நேரத்தில் அவனுக்கு சகாயஞ்செய்ய இரங்குவார் என்று நம்பியிருந்தான் (வச. 21-22).
நாம் சரீரப்பிரகாரமான, மன ரீதியான, மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாரங்களால் அழுத்தப்படுவதாக உணரும்போது, தேவன் நம்மை உண்டாக்கியதிலிருந்து தீர்மானித்திருந்த மீட்புப்பணியின் மூலம் நம்மை மீட்பதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். நாம் அவரை நோக்கி, “என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்” (வச. 22) என்று விண்ணப்பித்து மன்றாடலாம்.
நீங்கள் அழுத்தப்படும்போது தேவன் தம்முடைய கிருபையை உங்களுக்கு எவ்விதம் வெளிப்படுத்தினார்? உங்களைத் தேற்றி ஆறுதல் அளிப்பதற்கு மற்றவர்களை எவ்வாறு பயன்படுத்தினார்?
கிருபையுள்ள தேவனே, பாரத்தோடும், தொலைக்கப்பட்டவர்களாகவும் தங்களை கருதுகிற மக்களை ஊக்குவிக்க எனக்கு உதவிசெய்யும்.