எங்கள் வீட்டு சுவரில் அலங்கரிக்கப்பட்ட ஒரு வில் மற்றும் அம்பு, பல ஆண்டுகளாக தொங்கிக் கொண்டிருந்தது. நானும் என் தந்தையும் ஒரு பழங்குடி மக்கள் மத்தியில் மிஷனரிகளாய் பணியாற்றியபோது, அவர்களிடமிருந்து நினைவுப்பரிசாய் அவைகளைப் பெற்றோம்.
அங்கு பழக்கமான ஒரு நபர் எங்களை சந்திக்கும்படி வந்திருந்தார். வில்லைக் கண்டதும் அவர் முகநாடி சற்று வேறுபட்டது. அதில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறிய பொருளை சுட்டிக்காண்பித்து, “அது ஒரு மாயாஜால வஸ்து. அதற்கு சக்தி இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அதை என் வீட்டில் வைக்கமாட்டேன்” என்று அவர் கூறினார். விரைவாக, வில்லில் இருந்து அந்த வஸ்தை வெட்டி அப்புறப்படுத்தினோம். தேவனைத் தவிர்த்து, வேறு எந்த வழிபாட்டு வஸ்துக்களும் எங்கள் வீட்டில் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை.
எருசலேமின் ராஜாவாகிய யோசியா, தேவன் தன் ஜனத்திடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக் குறித்து அதிகம் அறியாதவராய் வளர்ந்தார். வெகுகாலமாய் பராமரிக்கப்படாத ஆலயத்தில் (2 இராஜாக்கள் 22:8) கண்டெடுக்கப்பட்ட நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்க விரும்பினான். விக்கிரக ஆராதனையைக் குறித்த தேவனுடைய சிந்தையை அறிந்தமாத்திரத்தில், யூதேயா தேசமனைத்தையும் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் வரையறைகளுக்கு உட்படும்பொருட்டு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தான். சாதாரண வில்லிலிருந்த அந்த மாயாஜால வஸ்துக்களை வெட்டியெறிவதை விட கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தினான் (காண்க 2 இராஜாக்கள் 23:3-7).
யோசியா ராஜாவிடமிருந்த நியாயப்பிரமாண புத்தகத்தைக் காட்டிலும் இன்று விசுவாசிகளிடம் அதிக அதிகமாய் இருக்கிறது. நம்மை வழிநடத்தும் முழு வேதாகமம் நம்மிடம் உள்ளது. உற்சாகப்படுத்தும் நபர்கள் இருக்கிறார்கள். சிறியதோ அல்லது பெரியதோ, எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பரிசுத்த ஆவியின் நிரப்புதல் நம்மிடம் இருக்கிறது.
நீங்கள் மாறவேண்டிய விஷயத்தை ஒரு விசுவாசி உங்களுக்கு சுட்டிக் காண்பித்த அனுபவத்தை உங்களால் விவரிக்கமுடியுமா? உங்கள் வாழ்க்கையின் எந்த காரியங்கள் தேவனை புண்படுத்தக்கூடும்?
பரலோகத் தகப்பனே, பரிசுத்த ஆவியின் செயல்பாட்டின் மூலம், உம்மைப் புண்படுத்தும் அனைத்தையும் தவிர்க்க எனக்கு உதவுங்கள்.