ஒரு தொழிலதிபர் தன்னுடைய கல்லூரி நாட்களில் தான் வாழ்க்கையில் நம்பக்கையிழந்தவராகவும், உதவியற்றவராகவும் அடிக்கடி உணர்ந்ததாக பேச நான் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் இந்த மனச்சோர்வினை அவர் மருந்துவரிடம் பகிர்ந்துகொள்ளாமல், தற்கொலை செய்வதைக் குறித்த புத்தகத்தை தன் நூலக முகவரிக்கு அவர் ஆர்டர் செய்து, தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான தேதியைக் குறித்தார்.
வாழ்க்கையில் நம்பிக்கையிழந்தவர்களையும் திக்கற்றவர்களையும் தேவன் நேசிக்கிறார். வேதாகம கதாப்பாத்திரங்களை கடினமான சூழ்நிலைகளில் தேவன் நடத்திவந்த விதங்களை அடிப்படையாய் வைத்து இதை உறுதிசெய்யமுடியும். யோனா சாவை விரும்பியபோது தேவன் அவரிடம் மென்மையாக இடைபட்டார் (யோனா 4:3-10). எலியா தன் ஜீவனை எடுத்துக்கொள்ளும்படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பித்தபோது (1 இராஜாக்கள் 19:4), தேவன் அவருக்குப் புத்துணர்ச்சி அளிக்க அப்பத்தையும் தண்ணீரையும் கொடுத்து (வச. 5-9), அவரிடம் மெல்லிய சத்தத்தில் பேசுகிறார் (வச. 11-13). அவர் தனிமையில் இல்லை என்பதை அவருக்கு உணர்த்துகிறார் (வச. 18). மனம் தளர்ந்தவர்களின் நடைமுறை தேவைகளை சந்திப்பதின் மூலம் தேவன் கனிவாய் அவர்களை அணுகுகிறார்.
தற்கொலையைக் குறித்த புத்தகம் நூலகத்தை வந்துசேர்ந்தது என்ற தகவல் அவருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தவறுதலாய் அந்த செய்தி அவருடைய பெற்றோர்களை சென்றடைந்தது. அவருடைய தாயார் மனமுறிவோடு அன்று அவருக்கு போன் செய்து பேசியபோது தான், இந்த தற்கொலை எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்திருக்கக்கூடும் என்பது அவருக்கு தெரிந்தது. அந்த செய்தி தவறுதலாய் அவருடைய பெற்றோருக்கு போகவில்லையெனில், இன்று அவர் உயிரோடு இருந்திருக்கமாட்டார்.
இவர் காப்பாற்றப்பட்டது ஏதேச்சையாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ நிகழ்ந்த சம்பவம் அல்ல. மாறாக, நம்முடைய ஆகாரமோ, தண்ணீரோ, அல்லது முகவரி தவறுதலோ, இதுபோன்ற விசித்திரமான தலையீடுகள் நம்மை காப்பாற்றும்போது, நாம் தேவனுடைய மென்மையான தழுவுதலை எதிர்கொள்கிறோம்.
உங்கள் மனச்சோர்வில் தேவன் உங்களை எப்படி சந்தித்தார்? தெய்வீக மென்மையின் செயல்பாட்டை வேறு எங்கு பார்த்திருக்கிறீர்கள்?
அன்பான தேவனே, நம்பிக்கையிழந்த திக்கற்றவர்களுக்கான உமது கனிவான மற்றும் நடைமுறையான அக்கறைக்காக நான் உன்னைத் துதிக்கிறேன்.