நான் வார்த்தை புதிர் விளையாட்டை அதிகம் விரும்புவேன். ஒரு குறிப்பிட்ட விளையாட்டிற்கு பிறகு என்னுடைய அந்த திரும்புமுனையான நகர்வுக்கு என்னுடைய நண்பர்கள் “கடாரா” என்ற என்னுடைய பெயரை வைத்து அழைக்க ஆரம்பித்தனர். அந்த விளையாட்டில் அனைவரும் விளையாடி முடித்தவுடன், மீதமிருந்த எழுத்துக்களை நான் ஒன்று சேர்த்து, ஆட்டம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் கொள்ளும் ஏழு எழுத்து வார்த்தையை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினேன். அதினிமித்தம் நான் ஐம்பது போனஸ் புள்ளிகளைப் பெற்றேன். மற்ற போட்டியாளர்களிடம் மீதமிருந்த அனைத்துப் புள்ளிகளையும் பெற்றேன். ஆட்டத்தின் கடைசி இடத்திலிருந்த நான் முதல் இடத்திற்கு நகர்ந்தேன். இப்போது நாங்கள் விளையாடும் போதெல்லாம் ஆட்டத்தில் யாராவது பின்தங்கியிருந்தால், மீண்டும் ஒரு “கடாரா” நிகழக்கூடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உதித்திருக்கிறது.

கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைவுகூருவது நம் ஆவியை புத்துணர்வு அடையச் செய்து நம் நம்பிக்கையை கட்டுகிறது. இஸ்ரவேலர்கள் பஸ்காவைக் கொண்டாடியபோது அதைத்தான் செய்தார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்தில் பார்வோனால் ஒடுக்கப்பட்டபோது தேவன் அவர்களுக்கு என்ன செய்தார் என்பதை பஸ்கா நினைவுபடுத்துகிறது (யாத்திராகமம் 1:6-14). அவர்கள் தேவனிடம் கூக்குரலிட்டபோது, தேவன் தன்னுடைய ஜனத்தை மகத்துவமான வழியில் விடுவித்தார். அவர்கள் வீடுகளின் நிலைக்கால்களில் இரத்தத்தை தெளிக்குமாறும், அதினிமித்தம் சங்கார தூதன் அவ்வழியாய் கடந்துபோகும்போது, அவர்களின் தலைச்சன் பிள்ளைகள் உயிரோடே காக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு அறிவித்திருந்தார் (12:12-13). அதின்படி அவர்கள் உயிரோடே காக்கப்பட்டனர்.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்டெடுத்த சிலுவை தியாகத்தின் நினைவுகூருதலாய் கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கிறோம் (1 கொரிந்தியர் 11:23-26). தேவன் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூருவதென்பது, நமக்கு இன்றும் நம்பிக்கையளிக்கக்கூடியதாயிருக்கிறது.