“வீடு போன்ற சிறந்த இடம் இல்லை” என்ற வரிகள், தி விஸார்ட் ஆஃப் ஓஸ் (The Wizard of Oz) என்ற அனைத்து கதைகளையும் சொல்லும் கருவியில், டோரதி பேசிய இந்த வரிகள் மறக்கமுடியாது. இது “கதாநாயகனின் பயணம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரு அசாதாரண சாகசம் முன்நிறுத்தப்படும்போது, ஒரு சாதாரண மனிதன் சாதாரண வாழ்க்கையை வாழ்கிறான். அதில் இடம்பெறும் கதாப்பாத்திரம் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய பயணத்தில் பல சோதனைகளையும், வழிகாட்டிகளையும் எதிரிகளையும் சந்திக்கிறது. அவர்களின் திறமையை அவர்கள் நேர்த்தியாய் நிரூபித்தால், தாங்கள் கற்றுக்கொண்ட கதைகள் மற்றும் அதின் ஒழுக்கநெறி பாடங்களோடு அவர்கள் வீடு திரும்பமுடியும். இதில் கடைசிப் பகுதி மிகவும் முக்கியமானது.

பிசாசு பிடித்த மனிதனின் கதை இந்த கதாநாயகனின் பயணத்திற்கு நெருக்கமாக அமைகிறது. அதின் கடைசிக் காட்சியில், பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மனிதன் இயேசுவுடன் வருவதற்கு தன்னை அனுமதிக்குமாறு கெஞ்சினான் என்பது சுவாரஸ்யமானது (மாற்கு 5:18). ஆயினும் இயேசு அவனிடம் “உன் சொந்த மக்களிடம் வீட்டிற்கு போ” (வச. 19) என்று கூறுகிறார். இந்த நபரின் பயணத்தில் ஏற்பட்ட இந்த சுவாரஸ்யமான அனுபவத்தை, வீடு திரும்பி தன்னுடைய மக்களிடம் அவற்றை அறிவிக்கவேண்டியது அவசியமாயிருந்தது.

தேவன் நம் ஒவ்வொருவரையும் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளினின்று அழைக்கிறார். ஆனால் நம்மில் சிலருக்கு, நம் நம்பிக்கை பயணத்தில் வீட்டிற்குச் சென்று, நம்மை நன்கு அறிந்தவர்களிடம் நம் கதையைச் சொல்வது மிகவும் முக்கியமானது. “வீடு போன்ற சிறந்த இடம் இல்லை” என்பதுதான் நம்மில் சிலருக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு.