என் தோழி, வாலிப பெண்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பரிசுத்தத்தைக் குறித்து பேசுமாறு என்னை கேட்க, நான் மறுத்துவிட்டேன். என் வாலிப பிராயத்தில் என் வீட்டை விட்டு வெளியேறிய நான், பல ஆண்டுகளாக என் ஒழுங்கீனத்தால் காயப்பட்டிருந்தேன். திருமணத்தின் பின், முதல் குழந்தை கருச்சிதைவுற்ற வேளையில், தேவன் என் கடந்தகால பாவங்களுக்காக என்னை தண்டிக்கிறார் என எண்ணினேன். இறுதியாக முப்பதாம் வயதில், என் வாழ்வை கிறிஸ்துவிடம் அர்பணித்தபோது, என் பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பினேன். இருப்பினும், குற்றமனசாட்சியும் அவமானமும் என்னைத் தொடர்ந்தது. தேவனின் மகா அன்பின் ஈவை நானே முழுமையாக பெற்றுக்கொள்ளாதபோது, அவரின் கிருபையைக் குறித்து பிறரோடு நான் எப்படி பேசுவது? ஆண்டுகள் நகர, என்னை என் குற்றமனசாட்சியில் கட்டிவைத்திருந்த என்னுடைய பழைய பாவங்களைக் குறித்த பொய்களை தேவன் மாற்றினார். கிருபையாக மன்னிப்பைப் பெற்றுக்கொண்டேன்.

நம்முடைய பாடுகளினாலும், கடந்தகால பாவங்களின் விளைவுகளினாலும் நாம் புலம்புவதை தேவன் அறிவார். எனினும், தம் ஜனங்கள் விரக்தியிலிருந்து மீண்டு, பாவங்களிலிருந்து திரும்பி, அவரின் மகா கிருபை, இரக்கம், மற்றும் உண்மைத்துவத்தில் (புலம்பல் 3:19-23) நம்பிக்கை வைக்க பெலன் தருகிறார். தேவனே நம் பங்கும், நம் நம்பிக்கையும், இரட்சிப்புமாய் உள்ளார் என்று (வச. 24-26) வேதம் சொல்கிறது. அவர் நல்லவர் என்பதை நாம் நம்பப் பழகுவோம்.
உருக்கமான நம் தகப்பன் தன் வாக்குறுதிகளை நம்ப நமக்கு உதவுகிறார். அவருடைய பெரிதான அன்பை நாம் ருசிக்கையில், அவருடைய கிருபையின் நற்செய்தியை நாம் பறைசாற்றலாம்.