இந்த காணொளி அதிகம் பகிரப்பட்டது. ஒரு அழகான மூத்தபெண்மணி சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்கிறார், ஒரு காலத்தில் பாலே நடனத்தில் புகழ்பெற்றவராய் திகழ்ந்த இந்த மார்த்தா, தற்போதோ மூளையை பாதிக்கும் அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டார். அவரிம் ஸ்வான் லேக் (swan lake) எனும் இசையை இசைக்கையில் மட்டும், ஆச்சரியமானது நடக்கும். அந்த இசை வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கயில், அவருடைய பலவீனமான கரங்கள் மெல்ல உயர ஆரம்பிக்கிறது. முதல் எக்காள இசை துவங்கும்போது, தன் சக்கரநாற்காலியிலிருந்து, அவர் செய்கை காட்டத் துவங்குகிறார். அவருடைய மனமும், உடலும் செயலிழந்துக் கொண்டிருந்தாலும், அவருடைய திறமை இன்னும் அப்படியே இருக்கிறது.
அந்த காணொளியைப் பார்த்த மாத்திரத்தில் 1கொரிந்தியர் 15ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பவுலின் உயிர்த்தெழுதல் போதனைக்கு நேராய் என் சிந்தை திரும்புகிறது. ஒரு விதை எவ்வாறு பூமியிலிருந்து துளிர்விட்டு எழும்புகிறதோ, அதேபோன்று விசுவாசிக்கிறவர்களின் சரீரம் இந்த பூமியில் அழிவுள்ளதாய், கனவீனமுள்ளதாய், பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும்;. ஆனால் அழிவில்லாததாய், மகிமையுள்ளதாய், பலமுள்ளதாய் எழுந்திருக்கும் என்று கூறுகிறார் (வச.42-44)). ஒரு விதைக்கும், தாவரத்திற்கும் இடையே ஒரு உடல் சார்ந்த இணைப்பு இருப்பது போல, நம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், நம்முடைய ஆளத்துவமும், தாலந்துகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அப்படியே செழிப்பாய் இருக்கும்.
ஸ்வான் லேக் என்னும் அந்த இசை மீட்டப்படும்போது, தான் ஒரு காலத்தில் எப்படியிருந்தோம் என்று தன்னுடைய முன்னிலைமையை நினைத்து மார்த்தா சோர்வடைந்தாள். ஆனால், ஒரு மனிதர் அவளருகே வந்து, அவளுடைய கரங்களை பற்றினார். நமக்கும் அப்படியே சம்பவிக்கும். எக்காளங்கள் தொனிக்க (வச. 52), ஒரு கரம் நம்மை பற்றிப்பிடிக்கும். இதுவரை இல்லாத வகையில் நேர்த்தியான ஒரு நடனத்தை நாமும் அப்போது ஆடுவோம்.
உங்களுடைய உயிர்த்தெழுதலுக்குப் பின் நீங்கள் எதைச் செய்ய வேண்டும் வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? இது முதுமையால் வருந்தும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு எவ்விதத்தில் நம்பிக்கை அளிக்கும்?
இயேசுவே, இழந்த அனைத்தும் எதிர்காலத்தில் மீட்கப்படுவதால் நான் உம்மைத் துதிக்கிறேன்.