1960களில், என்னுடைய தகப்பனாரை திருமணம் செய்யும் பொருட்டு என்னுடைய தாயார் தன்னுடைய கல்லூரி படிப்பை தவிர்க்க வேண்டியிருந்தது என்ற தகவலை என்னிடத்தில் பகிர்ந்துகொண்டார். வீட்டுபொருளியல் துறையில் ஆசிரியராய் பணியாற்ற வேண்டும் என்ற அவருடைய கனவையும் என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார். மூன்று பிள்ளைகளைப் பெற்ற பின்பு, அவர் கல்லூரிப் பட்டம் பெறவில்லை என்றாலும், அரசு நடத்தும் நிறுவனம் ஒன்றிற்கு ஊட்டச்சத்து உதவியாளராக பணியாற்றினார். ஒரு வீட்டுபொருளியல் ஆசிரியரைப் போன்று, ஆரோக்கியமான உணவுகளை செய்து நிருபித்துக் காண்பித்தார். அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து, தேவன் தன்னுடைய ஜெபத்தைக் கேட்டு தன் இருதயத்தின் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார் என்று அவர் என்னிடத்தில் பெருமிதத்துடன் கூறினார்.

வாழ்க்கை நமக்கும் அப்படியிருக்கலாம். நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்றாய் இருக்கலாம். ஆனால், தேவனுடனான நம்முடைய உறவும், நேரமும். அவருடைய தேறுதல், அன்பு, மீட்பு போன்ற அழகான குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. வெட்டுக்கிளிகளினால் ஏற்பட்ட சேதத்தினால் (வச. 25) நேரிட்ட இழப்புகளுக்கு தேவன் சரிகட்டுவதாய் யூத ஜனங்களுக்கு (யோவேல் 2:21) வாக்களிக்கிறார். நாம் சந்திக்கிற சவால்கள் மற்றும் நம்முடைய நிறைவேறாத கனவுகள் ஆகியவற்றில் தொடர்ந்து நமக்கு உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார். நாம் அவருக்காய் செய்கிற தியாகங்களுக்காய் நம்மை கனப்படுத்துகிற மீட்பின் தேவனை நாம் ஆராதிக்கிறோம் (மத்தேயு 19:29).

நாம் ஒரு அழிவுக்கேதுவான சவாலை சந்தித்தாலும் சரி அல்லது நனவாக்கப்படாத கனவுகளின் தருணத்தை சந்தித்தாலும் சரி, நம்மை மீட்கிற தேவனை நோக்கிக் கூப்பிட்டு அவருக்கு துதிகளைச் செலுத்துவோம்.