எழுத்தாளர் மார்லின் மக்என்டயர், தன் தோழியிடமிருந்து “மகிழ்ச்சியாயிருப்பதே பொறாமைக்கு எதிரானது” என்பதை தான் கற்றுக்கொண்ட விதத்தை பகிர்கிறார். இந்த தோழி மாற்றுத் திறனாளியாக, நெடுநாளாய் பல வலிகளோடு இருந்தவர், அவருடைய திறமைகளை அவர் விரும்பிய வகையில் வளர்த்திக்கொள்ள முடியாமல் அவர் உடல்நிலை அவர் திறன்களை மட்டுப்படுத்தியது. இருந்தபோதிலும், அவர் எப்படியோ தனித்துவமாக சந்தோஷத்தை அனுபவித்து மற்றவர்களோடும் மகிழ்ந்தார். அவர் மரிக்கும் முன்னர், தான் எதிர்கொண்ட ஒவ்வொன்றையும் பாராட்டி மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.
“பொறாமைக்கு எதிர்மறையானது மகிழ்ச்சியாய் இருப்பது” இந்த புரிந்துகொள்ளுதல், எனக்குள் நீட்டித்திருக்கிறது. என் வாழ்விலும் இருக்கும் சில நண்பர்களை எனக்கு நினைவூட்டுகிறது. அவர்கள் தங்களை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காமல், மற்றவர்களுக்காக ஆழமாகவும், உண்மையாகவும் மகிழ்ச்சி கொள்பவர்களாய் வாழ்கின்றனர்.
பொறாமை என்பது சுலபமாய் சிக்கிக் கொள்ளக்கூடிய வலை. அது நம்முடைய ஆழமான பாதிப்புகளையும், காயங்களையும், மற்றும் பயங்களையும் பயன்படுத்தி நாம் இப்படி இருந்தால் நமக்கு கஷ்டங்கள் இருக்காது, நாம் கவலைப்பட வேண்டியிருக்காது என்று நம்மோடு கிசுகிசுத்து கொண்டே இருக்கும்.
பேதுரு, புதிய விசுவாசிகளுக்கு 1பேதுரு 2இல் நினைப்பூட்டியது போல, பொறாமை நமக்கு சொல்லும் பொய்களிலிருந்து விடுபட இருக்கும் ஒரே வழி, சத்தியத்தில் ஆழமாக வேரூன்றுவது தான். எப்படியெனில், கர்த்தர் தயையுள்ளவர் என்பதை ஆழமாக ருசிப்பது; அதாவது ஆழமாக அனுபவிப்பது (வ.1-3). நாம் “சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு” கூரமுடியும் (1:22) எப்பொழுதெனில் ,”என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான” (1:23) தேவவசனமே நமது சந்தோஷத்தின் மெய்யான ஆதாரம் என்று நாம் அறிந்துகொள்ளும்.
நாம் உண்மையாகவே தெரிந்துகொள்ளப்பட்ட சநததியினராய், அவருக்குச் சொந்தமான ஜனமாயும், அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்க பட்டவர்களாயும் (2:9) இருக்கிறோம் என்பதை நாம் நினைவுகூரும்போது, மற்றவர்களோடு ஓப்பிடுவதை விட்டுவிடுவோம்.
எந்த ஒப்பீடும் இல்லாத மகிழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா? கிறிஸ்துவின் சரீரத்தில் உங்கள் ஸ்தானத்தை நீங்கள் நினைவுகூருவது, மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியத்திலிருந்து எவ்வாறு விடுவிக்கிறது?
அன்பு தேவனே, எல்லா நன்மைக்கும் ஆதாரமாய் இருப்பவரே, பொறாமையின் பொய்யிலிருந்து என்னை விடுவியும், இதுபோன்ற பொய்கள் சந்தோஷத்தை உறிஞ்சி, "எலும்புகளை உருக்குகிறது". மாறாக உம் ராஜ்யத்தில் உள்ள எண்ணிமுடியா வாழ்வின் ஈவுகளை கொண்டாடி மகிழ எனக்கு உதவும்.