வார்த்தைகளே இல்லை. வெறும் இசையும், அசைவும் தான். கோவிட் -19 பெருந்தொற்றின் மத்தியிலே 24 மணி நேர ஜும்பா தொடர் பயிற்சியில் உலகமெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்தனர். அவர்கள் இந்தியா, சீனா, மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் பகுதிகள், மற்றும் பல இடங்களில் இருந்து அவர்களை, நடத்தின பயிற்சியாளர்களை ஊடக வாயிலில் பின்பற்றினார்கள். இந்த வேறுபட்ட தனிநபர்கள் மொழிகளின் தடைகள் இல்லாமல் ஒன்றாக இசைந்து அசைய முடிந்தது ஏன்? காரணம், 1990களின் மத்தியில் கொலம்பியாவின் உடற்பயிற்சியாளரால் உருவாக்கப்பட்ட இந்த ஜும்பா என்கிற உடற்பயிற்சி முறையின் பயிற்சியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வாய்மொழி குறிப்புகளை பயன்படுத்துவது கிடையாது. வகுப்பில் பயிற்சியாளர்கள் அசைய, மாணவர்கள் அவர்கள் அசைவை பின்பற்றுவார்கள். ஒரு வார்த்தையும் இன்றி, கூச்சலும் இன்றி அவர்கள் அதைப் பின்பற்றுவார்கள்.
வார்த்தைகள் சிலசமயம் நம்மை இடையமறித்து தடை உண்டு பண்ணக்கூடும். கொரிந்தியர்கள் அனுபவித்தாற்போல சில குழப்பங்களையும் ஏற்படுத்த கூடும், அவர்களுக்கான முதல் நிருபத்தில் பவுல் இதை குறிப்பிடுகிறார். குறி[பிட்ட உணவுகளை உட்கொள்வதை குறித்து உண்டான தர்க்கங்களை விவாதிக்கையில் எழும்பின குழப்பமே அது (1 கொரிந்தியர் 10:27-30). ஆனால் நமது செயல்கள், தடைகளையும், குழப்பங்களையும் கூட கடந்து நிற்கும். இன்றைய வேத வாசிப்பு பகுதியில் பவுல் குறிப்பிடுவது போல, இயேசுவை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று ஜனங்களுக்கு நாம் நமது செயல்கள் மூலம் காண்பிக்க வேண்டும், “அநேகருடைய நன்மையை” விரும்பி தேட வேண்டும் (10:32-33) நாம் இயேசுவின் மாதிரியை பின்பற்றுகையில் (11 :1), அவரை விசுவாசிக்கும்படி நாம் உலகத்தாரை அழைக்கிறோம்.
யாரோ ஒருவர் சொன்னது போல,”சுவிசேஷத்தை எப்போதும் பிரசங்கியுங்கள், தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை உபயோகியுங்கள்”. நாம் இயேசுவின் தலைமையை பின்பற்றும்போது, அவர் நமது செயல்களையே நமது விசுவாசத்தின் உண்மையான அடையாளங்களாக வழிநடத்தி மற்றவர்களுக்கு தருவாராக. மேலும் நமது வார்த்தைகளும், செயல்களும் “தேவனுடைய மகிமைக்கென்றே” (10:31) இருப்பதாக.
என்ன வார்த்தைகள் இல்லா விசுவாசத்தின் அடையாளங்களை நீங்கள் மற்றவர்களுக்கு உங்கள் செயல்களால் காண்பிக்கிறீர்கள்? உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் மக்கள் எவ்வாறு கிறிஸ்துவை பார்க்கிறார்கள்?
பிதாவாகிய தேவனே, இயேசுவின் முன்மாதிரிக்காக உமக்கு நன்றி. அவரை அனுதினமும் என் வார்த்தைகளிலும், செயல்களிலும் எப்படி பின்பற்ற வேண்டுமென காட்டியருளும்.