ஒரு கோடை விடுமுறை வகுப்பில், என் மகன் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மலையில் ஏற விரும்பிய ஒரு சிறுவனை குறித்து புத்தகம் ஒன்றில் படித்தான். அச்சிறுவனுடைய பெரும்பாலான நேரம் இந்த இலட்சியத்திற்கு பயிற்சியெடுக்கவே செலவானது. இறுதியில் அவனுக்கான நேரம் கைகூடிவரும்போது, காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. மலையேற்றத்தில் ஒரு இடத்தில அவனுடைய குழுவிலிருந்த ஒருவன் நோய்வாய்ப்பட, தன் இலக்கை அடைவதற்கு பதிலாக அவனோடு தங்கியிருக்க தீர்மானிக்கிறான்.
வகுப்பறையில், என் மகனின் ஆசிரியர், “இக்கதையின் முக்கிய கதாபாத்திரம் அந்த மலையை ஏறாததால் அச்சிறுவன் தோற்றுவிட்டானா?” என கேட்டார். ஒரு மாணவன் “ஆம் ஏனெனில் தோல்வி என்பது அவனுடைய இரத்தத்திலேயே ஊறியுள்ளது” என்றான். ஆனால் இன்னொரு பிள்ளை இதை மறுத்தது. அச்சிறுவன் தோற்கவில்லை ஏனெனில் அவன் முக்கியமான ஒன்றை மற்றவருக்கு உதவுவதற்காக விட்டுக்கொடுத்தான் என்று காரணம் சொன்னான்.
நாம் நம்முடைய திட்டங்களை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்காக அக்கறை கொள்ளும்போது, நாம் இயேசுவை போல நடக்கிறோம். எங்கும் பயணித்து தேவனுடைய சத்தியத்தை பகிர்ந்துகொள்ள இயேசு சொந்த வீடு, நிரந்தர வருமானம் மற்றும் சமுதாய அங்கீகாரம் ஆகியவற்றை தியாகம் செய்தார். இறுதியாக, நம்மை பாவத்திலிருந்து விடுவித்து தேவனுடைய அன்பை காண்பிக்க தன் ஜீவனையே விட்டுக்கொடுத்தார் (1 யோவான் 3:16)
உலக பிரகாரமான ஜெயமும், தேவனுடைய பார்வையில் உள்ள ஜெயமும் அதிக வித்தியாசம் கொண்டவைகள். பிற்படுத்தப்பட்டோரையும், காயப்பட்டோரையும் மீட்க நம்மை உந்தித்தள்ளும் மனஉருக்கத்தை அவர் அதிகமாக மதிப்பீடுகிறார் (வ.17). ஜனங்களை காப்பாற்றும் தீர்மானங்களை அவர் அங்கீகரிக்கிறார். தேவனுடைய உதவியோடு, நாம் நமது மதிப்பீடுகளை அவருடைய மதிப்பீடுகளோடு இசையும்படிச் செய்து அவரையும், மற்றவர்களையும் நேசிக்க நம்மையே ஒப்புக்கொடுப்பதே எல்லாவற்றையும் பார்க்கிலும் மிக குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
வெற்றிக்கான தேடல் உங்கள் வாழ்வை எவ்வாறு பாதித்துள்ளது? சிலசமயங்களில் நமது மதிப்பீடுகளை தேவனுடைய மதிப்பீடுகளோடு இசையச் செய்வது ஏன் கடினமாயுள்ளது?
அன்பு தேவனே, நான் உம்முடைய பார்வையில் வெற்றிகரமானவனாய் இருக்க விரும்புகிறேன். நீர் என்னை நேசிப்பதுபோல நான் மற்றவர்களை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்று எனக்குப் போதியும்.