1952ல் மக்களின் கவனமின்மையால் கடையில் இருக்கும் பொருட்களை உடையாமல் தவிர்க்க கடைகாரர் ஒரு அடையாளத்தை வெளியிட்டார்: “நீங்கள் உடைத்த பொருள் உங்களுடையது.” பொருளை வாங்குபவர்களுக்கு அது எச்சரிக்கையின் வார்த்தைகளாக தென்பட்டது. இதுபோன்ற வித்தியாசமான அடையாள வாக்கியங்களை இதுபோன்ற கடைகளில் அநேகம் காணலாம்.
ஆனால் பரம குயவனுடைய கடையில் முரண்பாடான ஒரு வாக்கியத்தை நாம் பார்க்கமுடியும். எரேமியா 18ல் பதிவாகியுள்ள, “நீங்கள் உடைத்தால், நாங்கள் அதைவிட சிறந்ததாய் உருவாக்குவோம்” என்னும் வாக்கியமே அது. எரேமியா ஒரு குயவனின் வீட்டிற்குச் சென்று, குயவன் எவ்வாறு “கெட்டுப்போன” மண்பாண்டத்தை கையில் எடுத்து அதை நேர்த்தியாய் “வேறே பாண்டமாக வனைந்தான்” (வச. 4) என்பதை பார்க்கிறார். தேவன் மிகத்திறமையான குயவன் என்பதையும் நாம் களிமண் என்பதையும் தீர்க்கதரிசி நமக்கு நினைவூட்டுகிறார். தேவன் சர்வவல்லவர் என்பதினால், அவர் உருவாக்கிய பாத்திரத்தைக் கொண்டு தீமையை அழிக்கவும், நம்மில் அழகை உருவாக்கவும் அவரால் முடியும்.
நாம் கெட்டுப்போயிருந்தாலோ அல்லது உடைக்கப்பட்டாலோ தேவனால் நம்மை மீண்டும் உருவாக்க முடியும். அவர் திறன்வாய்ந்த குயவன்; நம்முடைய உடைக்கப்பட்ட வாழ்க்கைத் துண்டுகளைக்கொண்டு புதிய விலையேறப்பெற்ற பாத்திரத்தை அவரால் உருவாக்க முடியும். தேவன் நம்முடைய உடைந்த வாழ்க்கைகளையோ தவறுகளையோ, கடந்தகால பாவங்களையோ பயன்படாத விஷயங்களாய் பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக, நமது உடைந்த துண்டுகளை எடுத்து, அவருடைய பார்வைக்கு நலமாய் பட்டபடி மறுவுருவம் கொடுக்கிறார்.
நாம் உடைக்கப்பட்டபோதிலும் அவர் நம்மை பொருட்படுத்துகிறார். உடைந்த துண்டுகளும் அவரின் கைகளில் உபயோகப்படும் அழகான பாத்திரங்களாய் வனையப்படுகிறது (வச. 4).
தேவன் உங்களுடைய உடைந்த துண்டுகளை புதியதாக உருவாக்கும் குயவன் என்று அறியும்போது நீங்கள் எவ்விதம் ஆறுதலடைகிறீர்கள்? குயவன் உங்களை அழகிய பாத்திரமாய் உருவாக்கும்போது எவ்வளவு நிம்மதியாக உணர்கிறீர்கள்?
தேவனே, நீர் என்னுடைய குயவன். நான் களிமண். என்னை நீர் விரும்பியபடி வனையும். நான் உம்முடைய திறன்வாய்ந்த நேர்த்தியான கரங்களில் இருக்கிறேன் என்பதை எனக்கு நினைப்பூட்டும்.