“லேஸ் மிசெரபிலெஸ்” என்ற பிரபலமான ஒரு பிரெஞ்சு வரலாற்று நாவலில், பரோலில் வெளிவந்த ஜீன் வால்ஜீன் என்ற குற்றவாளி, ஒரு மதகுருவின் வெள்ளியைத் திருடிவிடுவான். அவன் கையும் களவுமான பிடிபடுகிறான். அவன் சிறைக்கு செல்லுவான் என்று எதிர்பார்க்கும் வேளையில், அந்த வெள்ளியை தானே அவனுக்குக் கொடுத்ததாக மதகுரு கூறி, அவனை காப்பாற்றுவார். காவலர்கள் போனதும், “இனி நீ தீமைக்குச் சொந்தமானவன் அல்ல; நன்மைக்கு சொந்தமானவன்” என்று அறிவுறுத்துவதாக நாவல் நீளுகிறது.
பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு விசுவாசிகளிடம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே நகரத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்தனர் என்றார். மக்கள் கூட்டம் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்கிறார்கள். பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” (அப்போஸ்தலர் 2:38) என்று ஆலோசனை கூறுகிறார். அவர்களுக்கு தகுந்த தண்டனையை இயேசு ஏற்றார். இப்பொழுது அவர்கள் விசுவாசத்தை அவர் மீது வைத்ததினால் தண்டனையிலிருந்து மன்னிக்கப்படுவர்.
என்னே ஆச்சரியமான கிருபை! மக்கள்தான் கிறிஸ்துவின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள், அதினால் அந்த மரணத்தால் அவர்களுக்கே மன்னிப்பளிக்கப்படுகிறது. தேவன் கிருபையுள்ளவர், வல்லமையில் சிறந்தவர். மானுடத்தின் பெரிய பாவத்தை அவர்களின் இரட்சிப்பிற்காகவே பயன்படுத்தினார். தேவன் இயேசுவை முன்பே சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்திருந்தால் எதுவுமே நன்மையானதாக மாறியிருக்காது என்று நாம் யோசிக்கலாம். சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிற (ரோமர் 8:28) அவர் ஒருவரையே விசுவாசியுங்கள்.
நீங்கள் இயேசுவுக்கு உங்களைக் கொடுத்துவிட்டீர்களா? இல்லையெனில், எது உங்களை தடுக்கிறது? உங்களை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள் என்றால், உங்களுடைய பயங்களையும் அவரிடம் ஒப்புக்கொடுக்கலாமே?
அன்பான தகப்பனே, உம்முடைய அளவுக்கடந்த அன்பால் என்னை பாவத்திலிருந்து மீட்டெடுத்தீர். என் எல்லா பயத்தையும் எடுத்துவிட்டு, உம் மீது விசுவாசம் வைக்க எனக்கு உதவிசெய்யும்.