ஜேம்ஸ் ஆறு வயதாக இருந்தபோது தனது மூத்த சகோதரனின் பதினான்காம் பிறந்தநாளுக்கு முந்தைய நாள் ஒரு விபத்தில் அவரை இழக்க நேர்ந்தது, தொடர் ஆண்டுகளில் தன் தாயார் சகோதரனை குறித்து ஆழ்ந்த சோகத்தில் இருந்தபோது ஜேம்ஸ் அவர்களை ஆறுதல்படுத்தும் வண்ணமாக, டேவிட் இந்த உலகில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியதில்லை என்று ஆறுதல்படுத்தினார். இந்த யோசனையானது பிற்காலத்தில் பிள்ளைகளால் பெரிதும் கவரப்பட்ட பாத்திரமான பீட்டர்ஃபான் வடிவiமைக்கப்பட உதவியது, நினைத்துப்பார்க்க முடியாத மன வேதனையின் கடினமான களத்திலிருந்து கூட நல்லது வெளிப்பட்டது.
தேவன், எல்லையற்ற படைப்பாற்றலின் வழியில், நம்முடைய மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து நல்லதை வெளியே கொண்டு வர முடியும் என்ற எண்ணம் எவ்வளவு ஆறுதலளிக்கிறது. பழைய ஏற்பாட்டிளுள்ள ரூத்தின் சரித்திரத்தில் இது ஒரு அழகான எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. நகோமி தனது இரண்டு மகன்களையும் இழந்து அவளுக்கு எந்த ஆதரவும் இல்லாமல் போனது. அவளுடைய விதவை மருமகள் ரூத் நகோமியுடன் தங்குவதற்கும் தன்னுடைய தேவனைச் சேவிப்பதற்கும் தேர்ந்தெடுத்தாள் (ரூத் 1:16). இறுதியில், தேவன் அவர்களின் தேவைகளை சந்தித்தவிதம் அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுத்தது. ரூத் மறுமணம் செய்து ஒரு குழந்தையைப் பெற்றாள், “அவர்கள் அவருக்கு ஓபேத் என்று பெயரிட்டார்கள். அவர் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தந்தை” (4:17). அவரும் இயேசுவின் மூதாதையர்களிள் ஒருவராக பட்டியலிடப்படுட்டார் (மத்தேயு 1: 5).
தேவனின் கனிவான இரக்கம் நமது திறனுக்கு அப்பாற்பட்டு, ஆச்சரியமூட்டும் இடங்களில் நம்மைச் சந்திக்கிறது. பார்த்துத்துக்கொண்டே இருஙகள்! ஒருவேளை நீங்கள் இன்று அதைப் பார்ப்பீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளில் இருந்து தேவன் எதிர்பாராத நன்மையை கொண்டு வருவதை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்? அவர் செய்ததை மற்றவர்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்ள முடியும்?
அன்பின் தேவனே, ஒரு நாள் நீங்கள் என் கண்களில் இருந்து வரும் ஒவ்வொரு கண்ணீரையும் துடைப்பீர்கள் என்பதற்கு நன்றி, ஏனென்றால் நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மன வேதனையையும் சிரமத்தையும் விட நீர் பெரியவர்.