கையோடு கைகோர்த்து, என் பேரனும் நானும் பிறந்தநாளுக்காக ஒரு சிறந்த ஆடையை வாங்க வாகன நிறுத்துமிடத்தைத் கடந்து சென்றோம். இப்போதுஒரு பள்ளி பாலனாகிய அவன் எல்லாவற்றையும் குறித்து உற்சாகமாக இருந்தான், அவனுடைய மகிழ்ச்சியை இன்னும் ஆனந்தமாக்க வேண்டுமென்று தீர்மனித்திருந்தேன். ஒரு காபி குவளையின் மீது இப்படியாக அச்சிடப்பட்டிருந்தது, “பாட்டி அதிக சர்க்கரைப்பூச்சு  கொண்ட அம்மாக்கள்.” சர்க்க்கரப்பூச்சு என்றால் வேடிக்கை, பளபளப்பு, மகிழ்ச்சிக்கு சமம்! அவனது பாட்டியாக நான் அவனுக்காக செய்யும் பணியின் விளக்கம், சரிதானே? அதுவும் . . . அதற்கு மேலும்.

தனது ஆவிக்குரிய மகன் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில், பவுல் தனது நேர்மையான விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார், அதனோடு அதன் தீமோத்தேயுவின் பாட்டி லோவிசாள் மற்றும் அவரது தாயார் ஐனிக்கேயாள் (2 தீமோத்தேயு 1: 5) ஆகியர்வர்களைகொண்ட அவரது பரம்பரையை பாராட்டினார். இந்த பெண்கள் விசுவாசத்தில் வாழ்ந்த இவ்வழியில் தீமோத்தேயுவும் இயேசுவை விசுவாசிக்கும்படி வந்தார். நிச்சயமாகவே, லோவிசாளும் ஐனிக்கேயாளும்  தீமோத்தேயுவை அதிகமாக நேசித்தார்கள், அவருடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்தனர். ஆனால் உண்மையாகவே, அவர்கள் இன்னும் அதிகமாக செய்தார்கள். இவர்கள் வாழ்வில் கொண்டிருந்த விசுவாசத்தை பிற்காலத்தில் தீமோத்தேயு தம் வாழ்வில் வாழ்வில் கொண்டிருந்த விசுவாசத்திற்கு ஆதாரமாக பவுல் குறிப்பிடுகிறார்.

ஒரு பாட்டியாக பிறந்தநாள் ஆடைக்கான எனது பணி இந்த “சர்க்கரைப்பூச்சு” தருணத்தை உள்ளடக்கியதாகும் . ஆனால் அதற்கும் மேலாக, நான் என் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அது இன்னும் சர்க்கரைப்பூச்சு நிலை தருணங்களாக மாறுகிறது: கோழி பிரியாணி-க்கு முன் தலை குனிந்து பிராதிப்பது . வானத்தில் தேவதூதர் போன்ற மேக அமைப்பு தோன்றுவது தேவனின் கலைப் படைப்புகளாகும். வானொலியில் இயேசுவைப் பற்றிய ஒரு பாடலுடன் மகிழ்ச்சியுடன் பாடுகிறது. நம் விசுவாசம் வாழ்க்கையில் சர்க்கரைப்பூச்சாக மாற அம்மாக்கள் மற்றும் யூனிஸ் மற்றும் லோயிஸ் போன்ற பாட்டிகளின் உதாரணத்தால் நாம் கவரப்படுவோமாக, அதனால் நம்மிடம் உள்ளதை மற்றவர்களும் பெற விரும்புவார்கள்.