விடுமுறை வேதாகம பள்ளியில் ஒரு வருடம், ஆதித் – தின் தேவாலயம் வேதாகம கதைகளை விளக்குவதற்கு உயிருள்ள விலங்குகளை கொண்டு வர முடிவு செய்தது. அவன் உதவ வந்தபோது, ஆதித் ஒரு ஆட்டை உள்ளே கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான். அவன் ஒரு கம்பளி மிருகத்தை உண்மையாகவே ஒரு கயிற்றால் தேவாலய மண்டபத்திற்குள் இழுத்து வர வேண்டியதாயிருந்தது. ஆனால் வாரம் செல்லச் செல்ல, அதற்கு அவனைப் பின்தொடர தயக்கம் குறைந்தது. வார இறுதிக்குள் ஆதித் இனி கயிற்றைப் பிடிக்க வேண்டியதில்லை; அது அவனை நம்பும் என்று அறிந்து அவர் ஆட்டை அழைத்தார் அது அவனை பின்தொடர்ந்தது.
புதிய ஏற்பாட்டில், இயேசு தன்னை ஒரு மேய்ப்பருடன் ஒப்பிடுகிறார், அவருடைய ஜனங்கள், ஆடுகள் அவருடைய குரலை அறிந்திருப்பதால் அவரைப் பின்பற்றுவார்கள் என்று குறிப்பிடுகிறார் (யோவான் 10: 4). ஆனால் அதே ஆடுகள் அந்நியர் அல்லது திருடனிடமிருந்து ஓடும் (வச. 5). ஆடுகளைப் போலவே, நாம் (தேவனுடைய பிள்ளைகள்) நம்முடைய மேய்ப்பரின் குரலை அவருடனான உறவின் மூலம் அறிந்துகொள்கிறோம். அப்படி நாம் செய்யும்போது அவருடைய தன்மையை நாம் காண்போம், அவரை நம்ப கற்றுக்கொள்வோம்.
நாம் தேவனை அறிந்து கொள்வதிலும் அன்புகூர்வதிலும் வளருவது, அவருடைய குரலை நாம் பகுத்தறியவும், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்” அப்படி வரப்போகும் அந்த திருடனிடமிருந்தும் (வச. 10) – நம்மை ஏமாற்றி அவரிடமிருந்து நம்மைப் பிரிக்க முயற்சிப்பவர்களிடமிருந்தும், திறம்பட தப்பியோடவும் செய்யும் (வச. 5). அந்த கள்ள போதகர்களைப் போலல்லாமல், பாதுகாப்பிற்கு நேராய் நம்மை வழிநடத்த நம் மேய்ப்பரின் குரலை நாம் நம்பலாம்.
வேதத்தைப் படிப்பதன் மூலம் தேவனுடைய தன்மையைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்ட ஒரு காரியமென்ன? அது உங்களை எவ்வாறு பாதித்தது? தேவனுடைய குரலைக் கண்டறிய உங்களுக்கு எது உதவும்?
பரலோகப் பிதாவே, என் அன்பான மேய்ப்பராக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. உமது குரலை மட்டும் அடையாளம் காணவும் மற்றும் பின்பற்றவும் எனக்கு உதவும்.