சீன பாரம்பரிய கதைகளின்படி, ஒரு மனிதர் தன்னுடைய விலை உயர்ந்த குதிரைகளில் ஒன்றை தொலைத்துவிட்டார், அவருடைய அந்த இழப்பிற்கு அண்டைவீட்டார் வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்த மனிதருக்கு பெரிதாக அக்கறை இல்லை. யாருக்கு தெரியும் இது எனக்கு நல்லதாக கூட இருக்கலாம்? என்றார் அவர். ஆச்சர்யமாக, தொலைந்த குதிரை வீடு திரும்பும்போது, தன்னுடன் வேறொரு குதிரையுடன் திரும்பியது. அதற்கு அண்டைவீட்டார் அவரை வாழ்த்தினார், அதற்கு அவர் யாருக்கு தெரியும் இது எனக்கு கெட்டதாககூட இருக்கலாம்? என்றார். அதற்கு ஏற்ற போலவே அவருடைய மகன் புதிய குதிரையின்மீது சவாரி செய்யும் போது கீழே விழுந்து காலை உடைத்து கொண்டான். ராணுவத்திலிருந்து ஆட்கள் அந்த கிராமத்திற்கு வந்து உடல் தகுதியான அனைத்து ஆண்களையும் போரில் சண்டையிட ஆள் சேர்க்க ஆரம்பிக்கும் வரை இது ஒரு துரதிருஷ்டம் போல தோன்றியது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருடைய மகன் சேர்க்கப்படவில்லை. அதுவே அவனுடைய உயிரை மரணத்திலிருந்து பாதுகாத்தது.
அதிர்ஷ்டத்தில் கஷ்டங்களும் ஆசீர்வாதமாக இருக்கும் மற்றும் நேர்எதிராகவும் இருக்கும் என்பதை போதிக்கும் சீன பழமொழிக்கு பின்னால் உள்ள கதை இதுதான். இந்த பண்டைய ஞானம் பிரசங்கி 6:12 உடன் நெருங்கிய இணைப்பு கொண்டது. அதில் அதன் ஆசிரியர்: ஒரு நபரின் வாழ்க்கைக்கு எது நல்லதென்று யாருக்கு தெரியும்? எதிர்காலம் என்ன வைத்திருக்கிறதென்று உண்மையில் நம் யாருக்கும் தெரியாது. துன்பத்தில் கண்டிப்பாக நல்ல பலன்களும் உண்டு, செழிப்பில் கண்டிப்பாக தீய விளைவுகளும் உண்டு, என்பதை கவனிக்கிறார்.
ஒவ்வொரு நாளும் புதிய சந்தர்ப்பங்களை, மகிழ்ச்சிகளை மற்றும் வேதனைகளை அளிக்கிறது. தேவனுடைய அன்புக்குரிய பிள்ளைகளாக நாம் அவருடைய இறையாண்மையில் இளைப்பாறலாம், நல்ல மற்றும் மோசமான நேரங்களிலும் நாம் அவரை நம்பலாம், “தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்” (7:14). நம் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் அவர் நம்முடன் இருக்கிறார் மற்றும் அவருடைய அன்புள்ள அக்கறையை நமக்கு வாக்குப்பண்ணி இருக்கிறார்.
துரதிர்ஷ்டம் ஆசீர்வாதமாக மாறியதற்கு ஏதேனும் ஒரு எடுத்துக்காட்டு உங்களுக்கு தோன்றுகிறதா? நல்ல மற்றும் மோசமான நேரங்களில் எப்படி நீங்கள் தேவன் மீது கவனத்தை செலுத்துவீர்கள்?
சர்வவல்ல தேவனே, என்னுடைய வாழ்க்கையை வழிநடத்துவதற்காக நன்றி. உம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாய் நீர் நடப்பிக்கிறீர் என்று விசுவாசித்து, நல்ல நேரத்திலும், மோசமான நேரத்திலும் உம்மை துதிக்க எனக்கு உதவி செய்யும்.