கதைகளின் படி, பிரிட்டிஷ் நடத்துனர் சர் தாமஸ் பீச்சம் விடுதியின் நடைவெளியில் ஒரு வித்தியாசமான தோற்றமுடைய பெண்ணை கண்டார். அவரை தனக்கு தெரியும் என்று நம்பினார் ஆனால் அவரால் அந்தப் பெண்ணின் பெயரை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அவர் அந்த பெண்ணுடன் பேச நின்றார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுக்கு ஒரு சகோதரர் இருப்பதாக குழப்பத்துடன் நினைவு கூர்ந்தார். ஒரு துப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த பெண்ணிடம் அவருடைய சகோதரர் இப்பொழுது எப்படி இருக்கிறார் என்றும் இன்னும் அவர் இதற்கு முன்பு செய்து வந்த அதே வேலையை தான் இன்னும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறாரா என்றும் கேட்டார். அந்த பெண் அதற்கு “அவர் மிகவும் நன்றாக இருக்கிறார், வழக்கம்போல் வீட்டில் சும்மா இருக்கிறார்” என்றார்.
 
சர் பீச்சம்க்கு நடந்தது போன்ற தவறாக அடையாளம் கண்டுகொள்ளும் நிகழ்வு என்பது சங்கடமாக இருக்கும். ஆனால் மற்ற நேரங்களில் இதுபோன்ற நிகழ்வு இயேசுவின் சீஷர் பிலிப்புவுக்கு நடந்தது போன்று இன்னும் தீவிரமானதாக இருக்கலாம். நிச்சயமயாக சீஷர்கள் இயேசுவை அறிவார்கள், ஆனாலும் அவர் உண்மையாக யார் என்பதை முழுவதுமாக அடையாளம் காணவில்லை. அவர்கள் இயேசு, “பிதாவைகாண்பிக்க” வேண்டினார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு பிரதியுத்திரமாக, “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றார்” (யோவான் 14:8-9). தேவனுடைய தனித்துவமான குமாரனாக ஒருவரை அறிவதென்பது மற்றவரை அறிவதாகும் என்பதை இயேசு பரிபூரணமாக வெளிப்படுத்தினார் (வ 10-11).
 
நாம் எப்போதாவது தேவனுடைய குணாதிசயம் என்ன, தனித்தன்மை என்ன, அல்லது அவர் மற்றவரை பற்றி எப்படி அக்கறை கொள்கிறார் என்பதை பற்றி வியப்படைவோமானால் அதை கண்டறிய நாம் இயேசுவை நோக்கிப்பார்த்தாலே போதும். இயேசுவின் குணாதிசயம், தயவு மற்றும் கிருபை, தேவனுடைய குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. என்னதான் நம்முடைய தேவன் நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கும், கிரகித்தலுக்கும் அப்பாற்பட்டவராக இருந்தாலும், அவர் இயேசுவில் தம்மை குறித்து வெளிப்படுத்திய அந்த மாபெரும் பரிசு நம்மிடம் உள்ளது.