என்னுடைய மகள், நான்சி டிரூவின் துப்பறியும் கதைகள் மீது அதிக ஆவல் கொண்டிருந்தாள். கடந்த மூன்று வாரங்களில், அவள், ஸ்லூயத் என்ற பெண்ணை பற்றிவரும், கிட்டத்தட்ட 12 புத்தகங்களை வாசித்தாள். அவளுடைய துப்பறியும் கதைகள் மீது அதிக ஆவல் கொண்டாள். நானும் குழந்தையாக இருந்த போது இத்தகைய புத்தகங்களின் மீது ஆவல் கொண்டிருந்தேன். 1960 களில் என்னுடைய அம்மா வாசித்த, நீல அட்டைகொண்ட இந்த புத்தங்கள், அவளுடைய அலமாரியில் இன்னமும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பாசம் சந்ததிகளுக்கும் கடந்து வருவது, வேறென்ன காரியங்களை நான் கடந்து வரச் செய்கின்றேன் என்பதைச் சிந்திக்கச் செய்தது. தீமோத்தேயுவுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதும் போது பவுல், அவனுடைய பாட்டி மற்றும் தாயாரின் “மாயமற்ற விசுவாசத்தைப்” பற்றி நினைக்கின்றார். இந்த மர்மக் கதைகளின் மீது அவளுக்கு இருக்கின்ற ஆவலோடு, அவளுடைய பாட்டியும் தாத்தாவும் கொண்டிருந்த விசுவாசத்தையும் ஊழியத்தையும் பற்றிக் கொண்டு, ஜெபத்திலும் “கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப் பற்றிய வாக்குத் தத்தத்தினையும்” (1 தீமோ.1:1) பற்றிக் கொள்வாள்.
பாட்டியும் தாத்தாவும் இல்லாதவர்களும் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையோடு இருப்பதையும் காணமுடிகின்றது. தீமோத்தேயுவின் தந்தையைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பவுல் அவனை “பிரியமுள்ள குமாரன்” (வ.2) என்று குறிப்பிடுகின்றார். விசுவாசத்தைக் கொடுப்பதற்கு குடும்பம் இல்லாதவர்களுக்கு, பெற்றோரும் பாட்டிகளும் தாத்தாக்களுமாக இருந்து, அவர்களைப் பரிசுத்தமாக வாழ அழைக்கும் (வ.9) நபர்களையும் ஆலயத்தில் காண்கின்றோம். தேவன் நமக்கு ஈவாக கொடுத்துள்ள பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை (வ.7) நாம் அணைத்துக் கொள்வோம். உண்மையில் நாம் ஓர் அழகிய பாரம்பரியத்தைப் பெற்றுள்ளோம்.
பரலோகத் தந்தையே, உமது கிருபையாலும் இயேசுவின்மீதுள்ள விசுவாசத்தாலும் இரட்சித்ததற்காக நன்றி கூறுகின்றேன். என்னுடைய அடுத்த தலைமுறையினருக்கு நான் பெற்றுள்ள ஈவையும் சுவிசேஷத்தையும் கொடுக்க உதவியருளும்.