Archives: நவம்பர் 2018

Overcoming Worry Day1

கவலைக்கு மருந்து

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். - பிலிப்பியர் 4:6

[embed]https://s3.amazonaws.com/audio.india/tamil/Overcoming+worry+-+tamil/OvercomingWorry-day1.mp3[/embed]

 

என் கணவனின் வேலைக்காகப் புது இடத்திற்குப் போவது உற்சாகமூட்டியது. ஆனால், அது அறியாத இடம், அங்குள்ள சவால்கள் என்னைக் கவலைப்பட வைத்தது. பொருட்களை வேண்டியது, வேண்டாதது என்று பிரித்துக் கட்ட வேண்டும், அங்கு வசிக்க ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும், எனக்கொரு வேலை தேட வேண்டும், புது நகரத்தில் ஒரு வழியும் தெரியாது, எப்படிக் குடியிருக்கப் போகிறேனோ என்று கவலைப்பட்டுக் கலங்கினேன்.…

Forgiveness Day5

முதல் அடியை எடுத்துவைத்தல்

தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். - 2 கொரிந்தியர் 5:19

தாம் டேஷீ தன் வாழ்வில் ஏதோ ஒரு குறையுள்ளதாக உணர்ந்தார். எனவே அவர் ஆலயத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். அதே ஆலயத்திற்குத்தான் அவருடைய மகளும் செல்வது வழக்கம். ஆனால், அவர்கள் இருவரும் இணைந்து சென்றதில்லை. முந்திய நாட்களில் அவர் தன் மகளைக் காயப்படுத்தியிருந்தார். அது அவர்களிடையே ஒரு பிளவை ஏற்படுத்திவிட்டது. எனவே அவர் ஆலயத்தில் பாடல் வேளை ஆரம்பித்தப்பின் தான் உள்ளே…

Forgiveness Day4

மன்னிக்கும்படி ஒரு ஜெபம்

உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். - லூக்கா 6:27-28

1960 ஆம் ஆண்டு, ஆறு வயதாயிருந்த ரூபி பிரிட்ஜஸ் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்க குழந்தை, தென் அமெரிக்காவிலுள்ள வெள்ளையரின் அனைத்து ஆரம்பநிலைப் பள்ளியை கலப்பினப் பள்ளியாக ஒருங்கிணைத்த முதல் குழந்தையாகும். கோபமான பெற்றோர் கூட்டத்தின் சாபக் குரல்களையும், பயமுறுத்தலையும், அவமானங்களையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் ரூபி பள்ளிக்குச் செல்ல உள்துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கினர். பள்ளியினுள் பாதுகாப்பாக, ஒரு…

Forgiveness Day3

நான் மன்னிக்க வேண்டுமா?

கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். - கொலோசெயர் 3:13

ஓர் நிகழ்ச்சிக்காக ஆயத்தம்செய்யும்படி ஆலயத்திற்கு நான் சீக்கிரமாக வந்திருந்தேன். அப்போது ஆலயத்தின் ஓர் ஓரத்திலே ஒரு பெண் நின்று அழுதுகொண்டிருந்தாள். கடந்த காலத்தில் அவள் என்னைப்பற்றி மிகமோசமாக புறங்கூறியதை நான் அறிந்ததினால், அவளைக் கண்டுகொள்ளாமல் ‘வாக்யூம் கிளீனரின்’ (vacuum cleaner) சத்தத்தில் அவள் அழுகையின் சத்தத்தை மூழ்கடித்துவிட்டு இடத்தை சுத்தப்படுத்த தொடங்கினேன். என்னை விரும்பாத ஒருவரைப்பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும் என்று எண்ணினேன்.

ஆனால், தேவன் என்னை எவ்வளவாக…

tamil reading plan - letting go of anger - day 5

கோபத்துடன் கூடிய ஜெபங்கள்

 

மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோஅதைப்பின்னுக்கு அடக்கி வைக்கிறான் - நீதிமொழிகள் 29:11

 

குளிர் காலத்தில் ஒரு நாள், எனது தோட்டத்தில் பனிவாரிக்கருவியை எனது கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டு, மிகவும் கோபத்துடனும், வேகத்துடனும் மூலையிலிருந்த மழை நீர் வெளியேற்றுக் குழாயை அடைத்துக் கொண்டிருந்த உறை பனியை நீக்கி கொண்டிருந்தேன். என்னை அவர்களது ஜன்னல்களின் வழியாகப் பார்த்த என் அயலகத்தார் என்னைக் குறித்து என்ன எண்ணுவது என்று ஒருவேளை அவர்களுக்கே தெரியாதிருக்கும். நுண் பனியை நீக்கும் பொழுது ஒவ்வொரு காலடி…

Forgiveness Day2

ஏன் மன்னிக்க வேண்டும்?

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்  - லூக்கா 23:34

என்னுடைய தோழி ஒருத்தி எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தபொழுது மன்னிக்க வேண்டியதின் அவசியத்தை நான் அறிந்திருந்தும் அவளை என்னால் மன்னிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனெனில் அவளுடைய வார்த்தைகள் என்னுடைய இருதயத்தின் ஆழத்தில் ஊடுருவிச்சென்று என்னை வேதனையினாலும் கோபத்தினாலும் நிலைகுலையச் செய்தது. பின்பு இதைக்குறித்து நாங்கள் பேசினபொழுது, அவளை நான் மன்னித்து விட்டதாகக் கூறினேன். ஆனாலும்…

Tamil reading plan - letting go of anger day 4

கோபத்தைக் கையாளுதல்

 

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது - எபேசியர் 4:26

 

நான் என் சிநேகிதியோடு உணவருந்தும் போது தன் குடும்ப நபர் ஒருவரினால் தான் எத்தனை வெறுப்படைந்திருக்கிறேன் என வெளிப்படுத்தினாள். அந்த நபர் தன்னை எரிச்சலூட்டும் வகையில் புறக்கணிப்பதையும் அல்லது கேலி செய்வதையும், அவனிடம் நேரடியாக இப்பிரச்சனையை குறித்து சந்திக்க முயலும்போது அவன் ஏளனமான வார்த்தைகளால் பதிலளித்ததையும் அவன் மீதுள்ள கோபத்தால் வெடித்தாள். இருவரும் ஒருவரையொருவர் குற்றப்படுத்த, அக்குடும்பத்தின் பிளவு அதிகமானது.

 

நானும் முன்பு…

Tamil reading plan - letting go of anger - day 3

இரக்கமுள்ள ஒரு இருதயம்

 

உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு  - கொலேசெயர் 3:12

 

ஒரு கூட்டமான கேளிக்கைப் பூங்காவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாங்கள் ஏழு பேர் சென்றிருந்தோம். நாங்கள் அனைவரும் ஒரே வரிசையில் ஒன்றாக அமர ஆசைப்பட்டு ஒரு வரிசையில் நுழைந்த பொழுது, ஒரு பெண் எங்களுக்கிடையே புகுந்து அவ்வரிசையில் அமரச் சென்றாள். அப்பொழுது என் மனைவி நாங்கள் ஒரே வரிசையில் அமர விரும்புவதை தெரிவித்த பொழுது “அதெல்லாம் சரிப்படாது,” என பட்டென்று கூறிவிட்டு தன்னுடன்…

Tamil reading plan - letting go of anger - day 2

கோபத்திற்கு ஓர் மாற்று

 

வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை - நீதிமொழிகள் 20:3

 

ஓரு நாள் காலை ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் (Perth) வசித்து வரும் பியோன் முல்ஹோலாந்த் (Fionn Mulholland) என்பவருடைய கார் காணமல் போனது. தடை செய்யப் பட்ட இடத்தில் அவரது காரை நிறுத்தி இருந்தது நினைவுக்கு வந்தவுடன், அவரது காரை அதிகாரிகள் எடுத்து சென்றிருப்பார்கள் என்பதை புரிந்துகொண்டார். காரை எடுத்து சென்றதற்கான $600 தொகையையும், அபராதத் தொகையையும் எண்ணியவுடன் முல்ஹோலாந்த் விரக்தியடைந்தார். ஆனால் காரை மீட்கும்பொழுது தான் சந்திக்க போகும் நபர் மேல்…