பல ஆண்டுகளாக நான் உடற்பயிற்சி செய்து வந்த உடற்பயிற்சி மையம் கடந்த மாதம் மூடப்பட்டது. எனவே நான் மற்றோர் புதிய உடற்பயிற்சி மையத்தில் சேர நேர்ந்தது. முன்பு உடற்பயிற்சி செய்த மையத்தில் இதமாகவும், நட்புடன் பழகும் வசதியும், பொதுவுடமைக் கொள்கையை ஆதரிப்பவர்களாகவே அனைவரும் செயல்பட்டனர். வியர்வை என்பது எங்களுக்கு ஏற்பட்டதில்லை. இந்த புதிய உடற்பயிற்சி மையம் உடற்பயிற்சிக்கான அனைத்து வசதிகளையும் கொண்டதாக தங்கள் உடற்கட்டமைப்பை சிறந்த முறையில் வைத்துக்கொள்வதற்காக மிகவும் அக்கறையுடன் தீவிரமாக செயல்படும் ஆண், பெண் உடற்பயிற்சி செய்பவர்களால் மாத்திரம் நிறைந்து காணப்பட்டது. அதைக் காத்துக்கொள்ள அவர்கள் அதிகமாய் தங்களையே வருத்தி, உழைத்தார்கள். அதனால் அவர்கள் உடல்கட்டு வலிமையுடன் காணப்பட்டது. ஆனால், அவர்கள் இருதயம் கிருபையினால் ஸ்திரப்பட்டிருந்ததா என்று எண்ணிப் பார்க்கிறேன்.
இருதயம் ஒரு தசை – இந்தத்தசை, சரீரத்திலுள்ள இதரத் தசைகள் சரிவர செயல்படச் செய்கிறது. நமது அனைத்து தசைகளையும் சரியான கட்டமைப்புடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வது நல்ல காரியம் தான், ஆனால் இருதயம் வலிமையாக இருக்க எதைச்செய்ய வேண்டுமோ அதைச்செய்வது மிக அவசியம்.
நமது ஆவிக்குரிய இருதயத்தைக் காத்துக்கொள்வதும் அதைப்போன்றதே. தேவனுடைய நன்மையும், கிருபையுமான செய்திகள் அடங்கிய சத்திய வார்த்தைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமாக நம் இதயத்தை பயத்துடனும், ஆரோக்கியத்துடனும் காத்துக்கொள்வது அவசியம். ஆவிக்குரிய நம் இருதயத்தை வலிமையாகவும், தகுதியாகவும் வைத்துக்கொள்வதற்குத் தான் மற்றெல்லாக் காரியங்களை விட முக்கியத்துவம் கொடுத்துக் காத்துக்கொள்வது மிக அவசியம்.
“தேவ பக்திக்கேதுவாக முயற்சி பண்ணு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்கு பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” (1 தீமோ. 4:7,8) என்று பவுல் அப்போஸ்தலன் எழுதியுள்ளான்.