அடுத்து, நாங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானத்தைச் சென்றடைவதற்காக விமான நிலைய வாகனத்தில் ஒரு கூட்ட பயணிகளுடன் நான் அமர்ந்து சென்று கொண்டிருந்த பொழுது, அந்த பேருந்து ஓட்டுனருக்கு, “வாகனத்தை நிறுத்து” என்று கட்டளை கொடுக்கப்பட்டது. இது நாங்கள் எங்கள் விமானத்தை பிடிக்க இயலாதது போல் காணப்பட்டது. இது பயணம் செய்தவர்களில் ஒருவரை மிகவும் பாதித்தது. ஒருவர் வாகன ஓட்டியிடம் கோபாவேசமாகக் கத்தி, “இந்தக் கட்டளையை ஏற்றுக்கொள்ளாதே. வாகனத்தை ஓட்டிச்செல். இல்லாவிட்டால் தான் வழக்குத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்றும் ஆவேசத்துடன் அச்சுறுத்தினார். அச்சமயத்தில் முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடிய ஓர் சிறுனகப் பெட்டியுடன், விமானப்பணியாளர் ஒருவர் மிக வேகமாக வாகனத்திற்குள் நுழைந்தார். கோபாவேசத்துடன் நின்ற அந்த மனிதரிடம் மிகவும் வெற்றிப் புன்னகையுடன் அவர் அந்தப் பெட்டியை நீட்டினார். அந்த மனிதன் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றபொழுது, “நீங்கள் உங்கள் பெட்டியை வைத்துவிட்டு வந்து விட்டீர்கள். நீங்கள் கலந்து கொள்ளப்போகும் ஓர் கூட்டம் மிக மிக முக்கியமானது என்று பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். எனவே இப்பெட்டி உங்களுக்கு அவசியம் தேவை என்று உணர்ந்து வாகனத்தை நிறுத்தச் சொல்லி, எடுத்து வந்தேன்” என்று கூறினார்.
நானும் சில சமயங்களில் தேவனின் செயல்களைப் பார்த்து பொறுமையை இழந்து விடுவதுண்டு. முக்கியமாக அவரின் வருகையின் தாமதம், “ஏன்? ஏதற்காக அவர் காத்துக்கொண்டு தாமதிக்கிறார்?” என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு. “நம்மைச் சூழ நிகழும் விபத்துக்கள், நாம் நேசிக்கும் மக்கள் படும் துயரம், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்கள், இவை எல்லாம் தொடுவானத்தில் நாம் எதிர்நோக்கியிருக்கும் இரண்டாம் வருகையைவிட மேலானவை.
இப்பொழுதுதான் நான் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக ஒருவர் தன் சாட்சியைச் சொல்வார், அல்லது எல்லாக் குழப்பங்களுக்கும் ஊடாக தேவன் இன்னும் கிரியை செய்கிறார் என்பதை உணர்வேன்; இவையெல்லாம், விமானநிலையத்தில் அந்த வாகனத்தில் நடந்தவற்றை தேவன் மாத்திரம் அறிந்ததும் என்னால் அறிந்து கொள்ள முடியாததுமான அநேக காரியங்களும் விளக்கங்களும் உண்டு என்றறிந்தேன். தேவனையே நான் சார்ந்திருக்கவும் அது என்னைப்பற்றிய காரியம் அல்ல என்பதையும் நான் அறிந்துகொள்ள என்னை உணர்த்துகிறது. இன்னும் தேவனுடைய குமாரனைப்பற்றி அறியாதவர்கள் அவரை அறிந்துகொள்ள தேவன் கொடுக்கும் தருணம். இதுவே அவரது திட்டம் (2 பேதுரு 8:9).