அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத்தில் உள்ள படைகள் தங்கள் சம்மதத்தை தெரிவிக்க அடித்தொண்டையிலிருந்து உரத்த சத்தமாய் “ஹூ” என்று பதிலுரைப்பார்கள். அதன் உண்மையான அர்த்தம் வரலாற்றில் மறைந்து விட்டது. ஆனால் இவ்வார்த்தை (HUA) என்ற ஓர் சொற்றொடரின் முதல் எழுத்திலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை என்று சிலர் கூறுகிறார்கள். (HUA; H-Heard கேட்டேன்
U-understood விளங்கிக் கொண்டேன் and A Acknowledged ஏற்றுக் கொண்டேன்) கேட்டேன், விளங்கிக்கொண்டேன், ஏற்றுக்கொள்கிறேன் என்பது அதன் அர்த்தம். நான் முதல் முதலாக அடிப்படை பயிற்சியின் பொழுது இந்த வார்த்தையைக் கேட்டிருக்கிறேன்.
அநேக ஆண்டுகளுக்குப் பின்பு நான் புதன்கிழமைகளில் காலையில் வேத ஆராய்ச்சிக்காக கூடிவந்தபொழுது இவ்வார்த்தையை நான் மறுபடியும் பயன்படுத்த நேர்ந்தது. ஒரு நாள் காலை அங்கு கூடிவந்தவர்களில், 82வது விமானப்பணி பிரிவில் முன்பு பணிபுரிந்த ஒருவர் ஓர் சங்கீதத்தை வாசித்து சேலா என்ற “குறியீடு” அநேக சங்கீதங்களில் தொடர்ச்சியாக வருவதைக் குறிப்பிட்டார். “சேலா” என்று வாசிப்பதற்குப் பதிலாக ‘ஹூ-ஆ’ என்று உரக்க உறுமினார். அதன்பின்பு சேலாவுக்கு பதிலாக ஹூ-ஆ என்ற பதிலே பழக்கத்தில் வந்தது.
சேலா என்ற பதத்திற்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பது தெரியாது. சிலர் அது ஓர் இசைக்குறியீடு என்று கூறுகிறார்கள். ஆழமாக நம்மில் புதைந்து கிடக்கும் உணர்வுகளுக்குப் பதில் அளிக்கும் வண்ணம் சத்தியம் அதற்கு அழைப்புக் கொடுக்கும் சமயங்களில் ‘சேலா’ குறியீடு காணப்படுவதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் ஹூ-ஆ எனக்கு சரி என்றே தோன்றுகிறது.
இன்று காலை நான் சங்கீதம் 68:19ஐ வாசித்தேன். “எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே! சேலா”
இதைக் கற்பனை செய்து பாருங்கள்! ஒவ்வொரு நாள் காலையிலும் தேவன் நம்மை அவர் தோள்மேல் ஏற்றி அன்று முழுவதும் நம்மைத் தூக்கிச் சுமக்கிறார். அவரே நமது இரட்சிப்பு. இவ்வாறு அவரில் நாம் பாதுகாப்பாகவும், அடைக்கலமாகவும் இருக்கிறோம். கவலைக்கோ, பயத்திற்கோ இடமில்லை. “ஹூ-ஆ” என்று நான் கூறுகிறேன்.