எங்கள் வீட்டில் “சில இணைப்புகள் தேவை” என்ற வார்த்தைகள் (எனக்கு) மிகவும் மனச் சோர்வையும் என் குடும்பத்தினருக்கு பெரும் வேடிக்கையாகவும் இருந்தது. எனக்கும், என் மனைவிக்கும் திருமணமான புதிதில், வீட்டில் சில பொருட்களைப் பழுது பார்ப்பேன், அது பேராபத்தை விளைவிக்கும். எங்கள் வீட்டு ஷவரின் கைப்பிடி சரியாக இயங்கவில்லை. நான் பழுதுபார்த்தேன். கைப்பிடி சரியானது. ஆனால் தண்ணீர் ஷவரில் வராமல் சுவர்களுக்கிடையில் ஓடினது. எங்களுக்குப் பிள்ளைகள் பிறந்தபின்பும் என் மனைவி செரிலிடம்,“இந்த சாதாரண விளையாட்டு சாமான்களை சரிசெய்ய “எனக்கு எந்தவித ஆலோசனையும் தேவை இல்லை” என்று என் மனைவியிடம் உறுதிபடக் கூறினாலும் பழுது பார்ப்பதில் படுதோல்விகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன. தவறு! மெல்ல, மெல்ல நான் பாடங்களைக் கற்றுக்கொண்டு, ஆலோசனைகளை மிகவும் கவனமாகக் கடைப்பிடித்ததால், காரியங்கள் நடக்க வேண்டிய விதத்தில் நன்கு நடைபெற்றுக் கொண்டிருந்தன. துரதிருஷ்டவசமாக நீண்ட காலம் காரியங்கள் நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், நான் மிகவும் தன்னம்பிக்கை உடையவனாக, மறுபடியும் ஆலோசனையை உதாசீனம் செய்து; நிச்சயமாகவே ஆபத்தை விளைவிக்கும் காரியங்களில் ஈடுபட்டேன்.

பண்டைய இஸ்ரவேல் மக்களும், இப்படிப்பட்ட மனோபாவத்தால் சிரமப்பட்டார்கள். தேவனை மறந்து, பாகாலையும், தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறிய ஆலோசனைகளைத் தள்ளிவிட்டார்கள் (நியா. 2:12). கர்த்தர் தமது இரக்கத்தின்படி, நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணி, சத்துருக்களின் கைகளுக்கு அவர்களை நீங்கலாக்கி, மீண்டும் தம்மண்டை சேர்த்துக்கொள்ளும் வரை அவர்கள் செயல் பேராபத்தை விளைவித்தது.

நாம் அவரை நேசிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நமக்கு அனைத்து ஆலோசனைகளையும் வழங்குகிறார். நம்முடைய வாழ்க்கையை நம் சுயசித்தத்தின்படி அமைத்துக்கொள்ள நாம் சோதனைக்குட்படும் பொழுது, நாள்தோறும் அவருடைய அன்பின் பிரசன்னத்தை உணரும்பொழுது நாம் அந்த சோதனையை எதிர்த்து நிற்கலாம். அவருடைய வார்த்தையிலும், அவருடைய பிரசன்னத்திலும் எத்தனை மாபெரும் ஈவுகளை நமக்களித்திருக்கிறார்!