அவனுக்கு மேலும் ஒரு சகோதரி கிடைக்கப்போகிறாள் என்பதை அறிந்த சிறுவனைப் பற்றிய வீடியோவை ஒரு வேளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவன் மனமுடைந்த நிலையில் “எப்பொழுதும் பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்று புலம்பினான்.
இந்தக் கதை மனிதர்களுடைய எதிர்பார்ப்புகளைப்பற்றிய ஒரு வெளிப்பாட்டைத்தருகிறது. ஆனால் ஏமாற்றம் அடைவதில் எந்த ஒரு வேடிக்கையும் இல்லை. இது நமது உலகத்தையே முழுவதும் நிரப்பிவிடுகிறது. வேதாகமத்திலுள்ள ஒரு நிகழ்ச்சி ஏமாற்றங்களால் நிறைந்திருக்கிறது. யாக்கோபு அவனுடைய எஜமானின் மகள் ராகேலைத் திருமணம் செய்வதற்காக 7 ஆண்டுகள் அவனுடைய எஜமானிடம் வேலை செய்ய ஒப்புக் கொண்டான். அவனது ஒப்பந்தம் முடிந்தவுடன், அவனது திருமண நாள் இரவு நிச்சயிக்கப்பட்டது. காலையில் அந்தப் பெண் அவள் நேசித்த ராகேல் இல்லை என்பதையும், அது லேயாள் என்பதையும் அறிந்தான். நாம் யாக்கோபின் ஏமாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் லேயாள் எப்படியாக உணர்ந்திருப்பாள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அவளை விரும்பாத, நேசிக்காத ஒரு மனிதனுடன் கட்டாயப்படுத்தப்பட்டு திருமணம் செய்யப்பட்டதால், அவளுடைய நம்பிக்கைகளும், கனவுகளும் எப்படியாக உடைத்தெறியப்பட்டிருக்கும்.
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்” என்று சங்கீதம் 37:4 நமக்கு கூறுகிறது தேவனுக்குப் பயப்படுகிறவர்கள் ஒருபோதும் ஏமாற்றம் அடையமாட்டார்கள் என்று நாம் நம்ப வேண்டுமா? இல்லை. அந்த சங்கீதத்தை எழுதினவரைச் சுற்றிலும் அநீதி நிலவினதை அவன் கண்டான் என்பதை அச் சங்கீதம் தெளிவாக விளக்குகிறது. ஆனால் அவன் “காத்தரை நோக்கி அமர்ந்து தொலைதூரப்பார்வையில் அவன் பார்க்கிறான். “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்” (வச. 11) என்பதே அவனது முடிவாகும்.
இறுதியில் ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, ரெபேக்காள் ஆகியோர் புதைக்கப்பட்ட குடும்ப கல்லறைத் தோட்டத்தில் லேயாளை யாக்கோபு புதைத்தான். இவ்விதமாக அவள் அவனால் கனப்படுத்தப்பட்டாள் (ஆதி 49:31) லேயாள் ஜீவனோடு இருந்தபொழுது அவள் யாக்கோபால் நேசிக்கப்படவில்லையே என்று எண்ணின லேயாளின் மூலமாகத்தான் நமது இரட்சகரை (இயேசுவை) தேவன் இந்த உலகத்திற்கு அனுப்பி உலகத்தை ஆசீர்வதித்தார். இயேசு நம்மால் இழக்கப்பட்ட நீதியையும், நம்பிக்கையையும் திரும்பத் தந்து நாம் நினைப்பதற்கும் மேலான சுதந்திரத்தை நமக்குத் தருகிறார்.