2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பென்சில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கில் இருக்கும், பிப்ஸ்தாவரஇயல் பூங்காவின் கண்ணாடி அறையைச் சுற்றி மிகப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் அனைவரும் அங்கு பூத்திருந்த சவப்பூ என்ற வெப்ப மண்டலச் செடியின் பூவைப் பார்க்க வந்திருந்தார்கள். அந்த தாவரம் இந்தோனேசியாவிற்கு உரியது. அத்தோடு கூட அது அநேக ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஒரு முறைதான் பூக்கும். ஆகவே அக்காட்சி பார்க்க வேண்டியதொன்றாகும். முள்ளுகளையுடைய அழகான சிகப்பு நிறமுடைய அந்தப் பெரிய பூ மலர்ந்தவுடன், கெட்டுப்போன மாமிச நாற்றமெடுக்கும். அந்த அழுகிப்போன மாமிச நாற்றத்தினால், கெட்டுப்போன மாமிசத்தைச் தேடி அலையும் ஈக்களையும், வண்டுகளையும் அந்தப் பூ தன் பால் ஈர்த்து, மகரந்தச் சேர்க்கை புரியும். அந்தப் பூவில் மது இல்லாததினால், இந்த முறையில் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடை பெறுகிறது. ஈக்களும், வண்டுகளும் ஏமாற்றமடைகின்றன.
அந்த சவப் பூவைப் போலவே, பாவமும் பல் வேறு வாக்குத்தத்தங்களைக் கொடுக்கும் ஆனால் முடிவில் பலன் ஏதும் இருக்காது. ஆதாமும், ஏவாளும் இந்தப் பாடத்தை கடினமான வழியில் கற்றுக் கொண்டார்கள். தேவன், அவர்களிடம், தொடக்கூடாது என்று கூறிய கனியை தொடும்வரை ஏதேன் தோட்டம் மிக அழகாக இருந்தது. தேவனின் நற்பண்புகளை சந்தேகிக்கும் அளவிற்கு அவர்கள் சோதனைக்கு உட்பட்டு, அவர்களை சிருஷ்டித்த சிருஷ்டிகரின் அன்பான எச்சரிப்பை அலட்சியம் பண்ணி, அவர்களது பரிசுத்தத்தன்மையை இழந்தார்கள். நன்மை தீமை அறியும் மரத்திற்கு தேவன் தந்த அளவு அவர்களுக்கு சவப்பூவாக மாறிவிட்டது. அவர்களது கீழ்ப்படியாமையான பலனாக அவர்கள் புறம்பே தள்ளப்பட்டு அந்நியராகி, வேதனையையும், வெறுமையையும், பாடுகளையம், மரணத்தையும் பெற்றார்கள்.
பாவம் இச்சிக்கத்தக்கதாகவும் நன்மையானது போன்றும் காணப்படும். நம்மிடம் பகிர்ந்துகொள்ளுவதற்காக, நம்மை சிருஷ்த்த தேவனை நம்பி கீழ்ப்படியும். அழகான ஆச்சரியமான மணம் வீசும் செயலோடு ஒப்பிடத்தக்கதல்ல.