டேவ் மியூல்லர் கீழே இறங்கி குழாயின் கைப்பிடியை திறந்தவுடன், குழாயிலிருந்து சுத்தமான நீர், கீழே வைக்கப்பட்டிருந்த நீல நிற வாளியில் கொட்டியது. சுற்றியிருந்த மக்கள் நீரைக் கண்டவுடன் கைதட்டி ஆரவாரித்து மகிழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்து வந்த சமுதாயத்தின் முதல் முறையாக சுத்தமான குடிநீரைக் கண்டதால் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். கென்யாவில் வசித்த அந்த பகுதி மக்களுக்கு கிடைத்த சுத்தமான குடிநீர், அம்மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கிறது.

சுத்தமான நீரை அந்த மக்களுக்கு வழங்குவதின் மூலம் அவர்களது தேவைகளை சந்திக்க டேவ்வும், அவரது மனைவி ஜாய்யும் மிகவும் கடினமாக உழைத்தார்கள். அவர்கள் தண்ணீர் கொடுப்பதோடு நின்றுவிடவில்லை. மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்க உதவியதுடன் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர்களுக்கு கூறினார்கள்.

2000ம் வருடங்களுக்கு முன்பு இயேசு என்ற பெயருடைய ஒரு மனிதர் சமாரியாவில் இருந்த ஒரு கிணற்றின் அருகே நின்று, சரீரப்பிரகாரமான தாகத்தை தீர்க்க, அக்கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த ஒரு பெண்ணிடம் பேசினார். ஆனால் இயேசு, அவளது ஆவிக்கேற்ற வாழ்விற்குத் தேவையான ஜீவத் தண்ணீர்தான் அவளுக்கு முக்கியமானது என்று கூறினார்.

சரித்திரம் பல்வேறு வகைகளில் முன்னேறி மிகவும் நாகரீகம் அடைந்த இந்தக் காலத்திலும் கூட, வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான தேவைகள் இரண்டே இரண்டு என்று தெளிவாகிறது. சுத்தமான தண்ணீர் இல்லையென்றால் நாம் மரித்துவிடுவோம். அதைவிட முக்கியமாக ஜீவத் தண்ணீரின் ஊற்றாகிய இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையில் இல்லாவிட்டால், நாம் நமது பாவங்களில் மரித்து விடுவோம்.

நாம் உயிர்வாழ தண்ணீர் மிகவும் அவசியம். சரீரப்பிரகாரமாக தண்ணீரும், ஆவிக்கேற்ற பிரகாரமாக ஜீவத் தண்ணீராகிய இயேசுவும் நமக்குத் தேவை. இயேசு இரட்சகர் அருளும் ஜீவத் தண்ணீரை நீங்கள் ருசித்துள்ளீர்களா?.