அந்த மெகா திரையில் காணப்பட்ட தெளிவான படத்தில் அந்த மனிதனை உடலில் ஏற்பட்டிருந்த ஆழமான வெட்டுக் காயங்களை அருகிலும், தெளிவாகவும் காணமுடிந்தது. ஒரு இராணுவ வீரன் அந்த மனிதனின் அடிக்க, இரத்தத்தினால் கறைபட்டிருந்த முகத்தையுடைய அந்த மனிதனை சூழ்ந்து நின்ற ஒரு கூட்ட மக்கள் கோபத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். திறந்த வெளி திரையரங்கின் அமைதியான சூழ்நிலையில் அந்தக் காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது. ஆகவே அந்த மனிதனுக்கு ஏற்பட்ட வலியை நானே உணர்ந்ததால் அதிகம் மனஉளைச்சல் கொண்டு முகத்தைச் சுழித்துக் கொண்டேன். ஆனால் இது நமக்காக இயேசு பட்ட பாடுகளை திரைப்படத்தில் நடித்துக் காட்டிய காட்சியாகும்.
“இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள் … மாதிரியைப் பின்வைத்துப் போனார்”. (1 பேதுரு 2:21) என்று இயேசுவின் பாடுகளை பேதுரு நமக்கு ஞாபகப்படுத்துகிறார். உபத்திரவங்கள் பவுல் அனுபவித்தது போன்று கடுமையானதாக இல்லாமல் இருக்கலாம். அவர் கிறிஸ்துவின் நிமித்தமாக தடியால் அடிபட்டார், கல்லெறியுண்டார், கப்பல் சேதத்திற்குட்பட்டார், கள்ளர்களால் தாக்கப்பட்டார், பசியினாலும், தாகத்தினாலும் கஷ்டப்பட்டார்,(2 கொரி 11:24-27) கிறிஸ்துவத்தை வெறுத்த சமுதாயங்களில் கொடுமையான உபத்திரவங்களை சகித்த பரிசுத்தவான்களைப் போல நாம் உபத்திரவப்படாமல் இருக்கலாம்.
ஆயினும் நாம் நம்மையே ஒடுக்கும்பொழுது துன்பங்களைச் சகிக்கும்பொழுது, நிந்தைகளை சகிக்கும்பொழுது, தேவனுக்கு மகிமை கொண்டுவராத செயல்களில் ஈடுபட மறுக்கும்பொழுது ஏதாவது ஒரு வகையில் நமக்கு உபத்திரவங்கள் வரலாம், பழிக்குப்பழி வாங்காமல் பொறுமையோடு சகிப்பது, நல் உறவுகளைக் கட்டுவதற்காக பிறரது குற்றங்களை மன்னிப்பது போன்ற செயல்கள் அனைத்தும் தேவனுடைய அடிச்சுவடை பின்பற்றுவதேயாகும்.
நாம் உபத்திரவங்களை சந்திக்கும்பொழுதெல்லாம் நமக்காக இயேசு சகித்த உபத்திரவங்களை நினைவில் கொள்ளுவோம்.