கிறிஸ்துவுக்குள்ளான ஆழமான விசுவாசத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் ஒரு குழு மக்களைப் பற்றி என் சிநேகிதன் என்னிடம் கூறினான். “யாருக்காவது ஏதாவது அவசரமான உதவி தேவை என்று நான் எண்ணினால், தயக்கமில்லாமல் உங்களில் யாரையாவது அதிகாலை 2 மணிக்கு உதவிக்குக் கூப்பிடலாம் என்று எண்ணுகிறேன்” என்று அவர்களில் 93 வயது நிரம்பிய ஒரு பெண் கூறினாள். அந்த அவசர உதவி ஒருவேளை ஜெபத்தேவையாகவோ, உதவக்கூடிய செயலாகவோ அல்லது தேவைப்படும் சமயத்தில் யாராவது உதவிக்கு இருக்கவேண்டும் என்ற சூழ்நிலையோ, எதுவாக இருந்தாலும் அந்த விசுவாசக் கூட்டத்திலிருந்த மக்கள் நிபந்தனை ஏதுமின்றி ஒருவருக்கொருவர் உள்ளான ஈடுபாடுடன் உதவி செய்து வந்தார்கள்.
கொலோசெயப் பட்டணத்திலுள்ள விசுவாசிகளுக்கு பவுல் எழுதின கடிதத்தில் அதே ஈடுபாடு வெளிப்படுகிறது. ரோமாபுரிச் சிறையிலிருந்து தீகிக்குவையும் ஒநேசிமூவையும் அவர்களை ஊக்கப்படுத்த அனுப்புவதாக பவுல் கூறுகிறார். (கொலோ 4:7-9) அரிஸ்தர்க்கு, மாற்கு, யுஸ்து வாழ்த்துதல்’ கூறினார்கள். (வச 10-11) “எப்பாப்பிராவும் நீங்கள் தேவனுக்குச் சித்தமானால்… எப்பொழுதும் போராடுகிறான்” (வச 12) என்று எழுதினார். இவை அனைத்தும் ஆழமான அன்பின் வெளிப்பாட்டுச் செயல்களின் நிச்சயமாகும்.
நீங்கள் “விடிகாலை 2 மணிக்குழுவில் உள்ளீர்களா?” அப்படியிருந்தால் உங்களது சிநேகிதரின் உண்மைத்தன்மைக்கு நன்றி கூறுங்கள். அப்படி இல்லாவிட்டால் உங்களோடு இணைந்து ஜெபிக்கவும், பிறரைப் பற்றி கரிசனைப்படவும், உங்களது மனபாரத்தை பகிர்ந்து கொள்ளவும் உண்மையான ஈடுபாடுடைய ஒரு சிநேகிதரைக் கொடுக்க தேவனிடம் மன்றாடுங்கள். இப்படிச் செய்வதினால் உங்களுடன் கூட பிறரும் இணைந்து கொள்ள வாய்ப்புண்டாகும் என்று எண்ணுகிறேன். கிறிஸ்துவின் அன்பை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எந்தக் காரியமாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் எந்த இடமாக இருந்தாலும் இயேசுவின் நாமத்தில் செயல்படுவோம்.