குடிபோதையில் வாகனத்தை ஓட்டினவன் காயமின்றித் தப்பித்துக்கொள்கிறான், ஆனால் அதே சமயம் அவனால் விபத்துக்குள்ளான, குடிபோதையில்லாத மனிதன் பயங்கரமாக காயப்படுகிறான். ஏன்? தீமை செய்கிறவர்கள் செழித்தோங்குகிறார்கள். நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் ஏன்? உங்களது வாழ்க்கையில் ஏற்படுகிற நிகழ்ச்சிகளைக் குறித்து அநேகமுறை நீங்கள் மனக்குழப்பமடைந்து “தேவன் என்னைக் குறித்து கரிசனைப்படுகிறாரா?” என்று கதறியுள்ளீர்கள்.

அநீதியும், கொடுமையும் கட்டுக்கு மிஞ்சி செல்லும் சூழ்நிலைகளை யூதாவில் கண்டபொழுது ஆபகூக் என்ற தீர்க்கன் இதே கேள்வியைக் கேட்டு மனதில் போராடினான். (ஆபகூக் 1:1-4) அவனது குழப்பமான நிலையில் தேவன் எப்பொழுதும் இந்த நிலையை மாற்றுவாரென்று, தேவனிடம் கேட்குமளவிற்கு தள்ளப்பட்டான் அதற்கு தேவனுடைய பதில் தெளிவாகவே இருந்தது.

யூத மக்களைத் திருத்துவதற்கு கல்தேயர்களை பயன்படுத்தப் போவதாக தேவன் கூறினார். கல்தேயர்கள் கொடுமையான செயல்களுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தீமையான செயல்களை செய்வதில் தீவிரமாக இருந்தார்கள். (வச.9) விக்கிரகங்களாகிய அவர்களது தேவர்களையும். அவர்களது படை வலிமையையும் ஆராதித்து வந்தார்கள். (வச 10-11)

தேவனுடைய வழிகளைப் புரிந்துகொள்ளாத நேரங்களில், தேவனுடைய மாறாத நற்பண்புகளை நம்ப வேண்டும். அதைத்தான் ஆபகூக் செய்தான். தேவன் நீதியும், இரக்கமும் சத்தியமும் உள்ளவர் என்று நம்பினான். (சங் 89:14) அவ்வாறு அவன் நம்பும்பொழுது, அவனது சூழ்நிலைகளின் அடிப்படையில் தேவனுடைய பண்புகளைப் பார்க்காமல், தேவனுடைய பண்புகளின் அடிப்படையில் அவன் பார்க்கக் கற்று கொண்டான். இறுதியில் அவன் “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்… நடக்கப் பண்ணுவார் (ஆபகூக் 3:19) என்ற முடிவுக்கு வந்தான்.