வட கரோலினாவிலிருந்து 300 மைல் தொலைவிலிருந்து 27 கடல் பயணிகளை சிறிய திசை காட்டும் கருவிகள் காப்பாற்றின. ஓய்வு பெற்ற வால்டிமார் செமினோவ் என்ற கடல் வியாபாரி அச்சமயத்தில் இளநிலைப் பொறியாளராக ss அல்கோ கைடு என்ற கப்பலில் பயணம் செய்தபொழுது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நீர் மூழ்கிக் கப்பலொன்று அவர் பயணம் செய்த கப்பலை நோக்கிச் சுட்டது அந்தக் கப்பல் சுடப்பட்டு தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்க ஆரம்பித்தது. செமினோவும் உடன்பயணிகளும் திசை காட்டும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த உயிர்காக்கும் படகுகளை கடலில் இறக்கினார்கள். அவற்றில் பொருத்தப்பட்டிருந்த திசை காட்டியின் உதவியினால் கரைக்கு அருகில் செல்லக் கூடிய இடத்தை அடைந்தார்கள். மூன்று நாட்கள் கழித்து அவர்கள் மீட்கப்பட்டார்கள்.
சங்கீதக்காரன் தேவனுடைய மக்களுக்கு அவருடைய வசனம் நம்பத்தக்கதான திசை காட்டும் கருவி என்று நினைவூட்டினான். தேவ வசனத்தை தீபத்திற்கு ஒப்பிடுகிறான் அந்தக் காலத்தில் ஒலிவ எண்ணெயினால் எரியும் விளக்கிலிருந்து விட்டு, விட்டு, வரும் ஒளி பயணிக்கு ஒரு அடி எடுத்து வைக்க மட்டும் தேவையான வெளிச்சத்தை தந்தது. தேவனுடைய வசனமும் அவ்வாறே தேவனைப் பின்பற்றுகிறவர்களுடைய பாதைக்கு வெளிச்சம் தரும் விளக்கமாக இருக்கிறது. (சங் 119:105) பிரச்சனைகள் நிறைந்த இருண்ட வாழ்க்கையில் சங்கீதக்காரன் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது, தேவன் அவருடைய வார்த்தைகள் மூலம் அவன் செல்ல வேண்டிய வழியில் நடத்துவார் என்று விசுவாசித்தான்.
நமது வாழ்க்கையின் திசை மாறும் பொழுது, தேவன் அவரது நம்பத்தக்க வார்த்தைகளை திசை காட்டியாக அருளி அவரோடுகூட நமக்கு மிக ஆழ்ந்த உறவை ஏற்படுத்துவதால் அவரை நாம் நம்பலாம்