எனது கல்லூரியில் எழுதும் பயிற்சி வகுப்பிலிருந்த ஒரு மாணவனிடமிருந்து வந்த மின்னஞ்சல் அவசரத் தன்மையை வெளிப்படுத்தினது. கல்லூரியின் இறுதிப்பருவத்திலிருந்த அவனுக்கு, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள சற்று உயர்ந்த மதிப்பெண்கள் தேவை என்பதை உணர்ந்தான். அதற்கு அவன் என்ன செய்ய இயலும், செய்ய வேண்டிய பாடசம்பந்தமான சில வேலைகளை அவன் செய்யத் தவறி இருந்தான். ஆகவே அவனுடைய மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்து விடுபட்ட வேலையை முடிக்கக் கூறினேன். “நன்றி அதனை உடனே செய்கிறேன்” என்று மாறுத்தரம் கூறினான்.

இரண்டு நாட்கள் கடந்து விட்டன. அவன் கூறினபடி அவனது பணியை முடிக்கவில்லை.

இதைப் போலவே செயல்பட்ட ஒரு வாலிபனைப் பற்றி இயேசு கூறினார். அந்த வாலிபனின் தகப்பனார். திராட்சைத் தோட்டத்திற்கு சென்று சில வேலைகள் செய்யும்படி அவனிடம் கூறினார். “சரி நான் போகிறேன்” (மத்தேயு 21:30) என்று மகன் கூறினான். ஆனால் அவன் பேச்சளவில் சொன்னானேயல்லாமல் செயல்படவில்லை போகவேயில்லை.

இந்த உவமையை மேத்யு ஹென்றி விளக்கும்பொழுது “மொட்டுகளும், பூக்களும் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பற்றி மனதில் யோசிக்கும் செயலாகும். நாம் யோசிப்பது செயல்படாவிட்டால் அதன் விளைவு கனியற்றிருக்கும். கீழ்ப்படிதலைப் பற்றிப் பேசியும் மனந்திரும்பாமல் கீழ்ப்படிதலைப் பின்பற்றாத யூதமதத் தலைவர்களுக்காக இயேசு இந்த உவமையைக் கூறினார். அவருடைய வார்த்தைகள் நமக்கும் உரியவைகளாகும். “கிரியையினாலும் உண்மையினாலும்” (1 யோவான் 3:18) என்ற வசனத்தின்படி தேவனை பின்பற்றப் வேண்டுமேவொழிய, வெறும் வாக்குகளைக் கொடுப்பதினால் நமது ஆண்டவரும், இரட்சகருமாகிய தேவனை மகிமைப்படுத்த இயலாது.

தேவனுக்கு கீழ்ப்படியும் நமது செயல்கள் மூலம், தேவனுக்கு நமது அன்பையும், கனத்தையும், புகழ்ச்சியையும் தெரிவிக்கலாமே ஒழிய, நம்மை நல்லவர்கள் போல காண்பிக்கும் வெறும் வார்த்தைகளால் அல்ல.