எனது முன்னோர்கள் மிக்சிகனில் முன்னோடிகளாகக் குடியேறினவர்களாவார்கள். அவர்களது குடும்பங்களைப் போஷிக்க நிலத்தை சுத்தப்படுத்தி, பண்படுத்தி தானியங்களைப் பயிரிட்டு தோட்டங்களை ஏற்படுத்தினார்கள். வேளாண்மை செய்யும் தொழில் அவர்களிடமிருந்து பல தலைமுறைக்கு கடத்தப்பட்டது. எனது தகப்பனார் மிக்சிகனிலுள்ள ஒரு பண்ணையில் வளர்ந்தார். அவர் தோட்டத் தொழிலை அதிகம் நேசித்தார். அதனால் எனக்குத் தோட்டத் தொழிலும், தோட்டத்திலிருந்த சத்துள்ள மண்ணின் வாசனையும் மிகவும் பிடித்தமாக இருந்தது. அழகிய பூக்களையும் வாசனை மிகுந்த ரோஜாச் செடிகளையும் வளர்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஓய்வு நேரப் பணியாகும். களைகள் மட்டும் இல்லாமல் இருந்தால் அது மிகவும் அற்புதமான பணியாக இருக்கும்.

களைகளோடு நான் போராட வேண்டி இருந்தபொழுது ஏதேன் தோட்டம் எனக்கு ஞாபகம் வந்தது. ஆதாமும். ஏவாளும் பாவம் செய்யாதவரை அத்தோட்டம் மிகவும் அழகாக இருந்தது அவர்கள் பாவம் செய்தபின் அது முள்ளும், குறுக்கும் விளைவித்தது. அவர்களுக்கு மட்டும் அல்லாமல் இன்றுவரை ஒவ்வொரு தோட்டக்காரருக்கும் களைகள் இடையூறாக இருக்கிறது. (ஆதி 3:17-18)

வேதாகமம் மற்றொரு தோட்டத்தைப் பற்றியும் கூறுகிறது. அது ஏதேன் தோட்டத்தில் உண்டான பாவத்தின் விளைவைப் போக்குவதற்கு, இயேசு மரணம் அடைவதைத் தவிர வேறு ஏதாவது வழி இருக்குமாவென்று கேட்டு பிதாவிடம் மன்றாடின கெத்சமனே தோட்டமாகும். மிகவும் வேதனைகளை உண்டுபண்ணும் வழியாகிய மரணத்தை ஏற்றுக் கொள்ள இயேசு முழுமையான கீழ்ப்படிதலோடு பிதாவுக்கு தம்மை ஒப்புவித்தார். “உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது”. (மத்தேயு 26:42)

இயேசு அந்தக் தோட்டத்தில் பிதாவின்சித்தத்திற்கு நம்மை முழுமையான ஓப்புக் கொடுத்ததினால் ஏற்பட்ட அற்புதமான கிருபையின் பலனை இன்று நாம் அனுபவிக்கிறோம். நமது வாழ்க்கையிலுள்ள பாவமான களைகளை அவர் அகற்றுவதற்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க இது வழி வகுக்கட்டும்