எனது பெற்றோரோடு சேர்ந்து குடும்பமாக சாலை வழியாக பயணம் செய்வதை நான் நிறுத்தினபொழுது, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வசித்து வந்த எனது தாத்தா, பாட்டியை சென்று பார்ப்பது மிகவும் அபூர்வமாகிவிட்டது. ஆகவே ஒருமுறை அவர்கள் வசித்து வந்த விஸ்கான்சிஸினிலுள்ள லேண்டு ஆஃப் லேக்ஸ் (Land of Lakes) என்ற சிற்றூருக்கு ஒரு விமானம் மூலம் சென்று நீண்ட வார விடுமுறை நாட்களை கழிக்க தீர்மானம் பண்ணினேன். நான் திரும்பி எனது ஊருக்குச் செல்ல விமான நிலையத்திற்கு சென்றபொழுது, விமானப் பயணம் செய்திராத எனது பாட்டி “அது மிகச் சிறிய விமானமாகவுள்ளது. நீ உயரப் பறக்கும்பொழுது உன்னைத் தாங்கிப் பிடிக்க எதுவுமே இல்லை, அப்படித்தானே?… அவ்வளவு உயரத்தில் பறக்க நான் அதிகம் பயப்படுவேன்” என்று கூறினார்கள்.
நான் அந்த சிறிய விமானத்தில் ஏறினபொழுது முதல்முதலாக பறப்பது போன்ற பய உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. உண்மையில் அந்த விமானத்தை தாங்கி நிற்பது என்ன?
காரணமற்ற பயங்கள் அல்லது உண்மையான பயங்கள் நம்மை பயமுறுத்தத் தேவையில்லை. தாவீதின் புகழ் மக்கள் மத்தியிலே பரவினபொழுது. சவுல் அவன்மேல் பொறாமை கொண்டு தாவீதை விடாமல் பின்தொடர்ந்தபொழுது தாவீது அகதியைப் போல வாழ்ந்து வந்தான். தேவனோடு கூடிய உறவில்தான் தாவீதுக்கு ஆறுதலும், அமைதியும் கிடைத்தது. “நான் கர்த்தரைத் தேடினேன்… நீங்கலாக்கிவிட்டார்” என்று சங்கீதம் 34:4ல் கூறினான்.
பரலோகத்திலுள்ள நமது தந்தை ஞானமும் அறிவுமுள்ளவர். பயம் நம்மை தாக்கும்பொழுது நாம் அவர் நமது தேவனென்றும், அவர் நம்மை எப்பொழுதும் தாங்கிப் பிடிக்கிறாரென்றும் நினைவு கூர வேண்டும்.