ஒரு படை அதிகாரிக்கு குறிப்பிட்ட விதிமுறைகள் இருக்கும். ஆனால் ஒவ்வொரு யுத்தத்திற்கு முன்பும் புதிய விதிமுறைகளைப் பெறவும் வேண்டும், கொடுக்கவும் வேண்டும். இஸ்ரவேல் மக்களின் தலைவனாகிய யோசுவா இந்தப் பாடத்தைப் படிக்க வேண்டியதிருந்தது. தேவனுடைய ஜனங்கள் வனாந்திரத்தில் நாற்பது ஆண்டுகள் கழித்தபின்பு, தேவன் வாக்குத்தத்தம் பண்ணின தேசத்திற்கு. இஸ்ரவேல் மக்களை தலைமை தாங்கி நடத்திச்செல்ல தேவன் யோசுவாவை தெரிந்தெடுத்தார்.
முதல், முதல் அவர்கள் சந்தித்த அரணிப்பான இடம் எரிகோவாகும். யுத்தத்திற்கு முன்பு யோசுவா, “தேவனுடைய சேனைகளின் தலைவனை” (ஒருவேளை தேவனாகவே இருக்கலாம்) உருவின பட்டயத்துடன் அவனுக்கு எதிர்த்து நிற்பதைப் பார்த்தான். யோசுவா அவரது பாதங்களில் வீழ்ந்து பணிந்து கொண்டான். வேறு வார்த்தைகளில் கூறப்போனால் தேவனுடைய வல்லமையையும் அவனது சிறுமையையும் புரிந்து கொண்டான். பின்பு அவன். “என் ஆண்டவர்… என்னவென்று கேட்டான் (யோசுவா 5:14) எரிகோவைப் பிடிப்பதில் யோசுவா வெற்றி பெறக் காரணம் அவன் தேவனுடைய கட்டளைகளை பின்பற்றினதேயாகும்.
மற்றொரு சமயத்தில் யோசுவாவும் ஜனங்களும் “கர்த்தருடைய வாக்கைக் கேட்கவில்லை”. (9:14) அதன் விளைவாக அவர்கள் ஏமாற்றப்பட்ட கானானிலிருந்த எதிரிகளில் ஒருவராகிய கிபியோனியரோடுகூட சமாதான உடன்படிக்கை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது தேவனுக்கு பிரியமில்லாதிருந்தது. (வச 3-26)
நாமும் கூட நமது வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களைச் சந்திக்கும்பொழுது, தேவனையே சார்ந்திருக்கிறோம். இன்று நாம் மனத்தாழ்மையுடன் அவரண்டை வர அவர் வாஞ்சிக்கிறார். நாளையும் அவர் நம்மோடுகூட இருப்பார்.