1966ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் உயர்பதவியிலிருந்த ராபர்ட் கென்னடி தென் ஆப்பிரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின ஒரு பயணத்தை மேற்கொண்டார். அங்கு கேப் டவுன் பல்கலைக் கழகத்தில் நிற வெறிக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் புகழ்பெற்ற “நம்பிக்கை” என்ற சிற்றலை என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சில் ஒரு குறிக்கோளுக்காகவோ அல்லது பிறருடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவோ அல்லது அநீதியை எதிர்த்தோ ஒரு தனிமனிதன் நின்றால் அவன் நம்பிக்கை என்ற சிறு அலையை தோற்றுவிக்கிறான். இதுபோல பல்லாயிரக்கணக்கான சிற்றலைகள் பல்வேறு மையங்களிலிருந்து தோற்றுவிக்கப்படும்பொழுது, அச்சிற்றலைகள் இணைந்து அடிமைத்தனத்தை உடைத்தெறியக்கூடிய சக்திவாய்ந்த வேகத்துடன் கூடிய நீரோட்டமாக மாறிவிடும் என்று அறிவித்தார்.
சில சமயங்களில் இவ்வுலகில் நம்பிக்கைக்கே இடமில்லாதது போல் தோன்றும் ஆயினும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு திடமான நம்பிக்கையுண்டு. “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக அவர் இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே அழியாததும், வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்”. (1 பேதரு 1:3-4) என்று பேதுரு எழுதினார்.
கிறிஸ்துவின் நிச்சயமான உயிர்த்தெழுதலின் மூலம் தேவ பிள்ளைகளுக்கு சிற்றலைக்கு மேலான நம்பிக்கையுள்ளது. அது நமக்காக மரணத்தை வென்ற ஒருவரின் (இயேசு) மேலுள்ள நம்பிக்கை எனும் வேகமான நீரோடையாகும். நமது இறுதி சத்துருவாகிய மரணத்தை இயேசு ஜெயித்ததின் மூலமாக, நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் நம்பிக்கையை அருளுகிறார்.