“காதல் பூட்டுக்கள்” என்பது சமுதாயத்தில் வளர்ந்து வரும் நிகழ்வாகும். காதல் வசப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் காதல் பூட்டுக்களை பிரான்ஸ், சீனா, அஸ்டிரியா, செக் குடியரசு, செர்பியா, ஸ்பெயின், மெக்ஸிகோ, வட அயர்லாந்து போன்ற உலகின் பல பகுதிகளிலுள்ள பாலங்கள், கதவுகள், வேலிகள் ஆகிய இடங்களில் மாட்டி வைத்துள்ளனர். தம்பதிகள் அவர்களது பெயர்களை பூட்டுக்களில் பதித்து பொதுவான இடங்களில் அவர்களின் மாறாத அன்பின் சின்னங்களாக வைக்கின்றனர். அதிகமான அளவில் பூட்டுக்கள் மாட்டப்பட்டால், அவற்றின் அதிக எடையினால் பாலங்கள் போன்ற பொது இடங்கள் பாதிக்கப்படும் என்று அவற்றிற்குரிய அதிகாரிகள் எரிச்சல் அடைகின்றனர். சிலர் அத்தகைய செயல்கள் பொது இடங்களை சேதப்படுத்துகிறது என்றும் வேறு சிலர் அவை அர்ப்பணிக்கப்பட்ட காதலின் அழகிய கலைச் சின்னம் என்றும் எண்ணுகின்றனர்.

கர்த்தர் தமது “உண்மையான நித்திய அன்பை” நமது பாவங்களுக்கு மன்னிப்பு அருள தமது ஜீவனை ஒரு பொதுவான இடத்தில் சிலுவை மரணத்தின் மூலம் அவரது அன்பை வெளிப்படுத்தினார். நமது அனுதின வாழ்க்கையிலும் அவரது அன்பை தொடர்ந்து காண்பிக்கிறார். இரட்சிப்பு என்பது தேவனோடுகூட நித்திய காலமாய் வாழப்போகிறோம் என்ற வாக்குத்தத்தமட்டுமல்லாமல், நமது அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் மன்னிப்பு, வாக்குத்தத்தம், தேவைகள் சந்திக்கப்படல், தேவனோடு கூடிய உறவிலுள்ள கிருபை ஆகியவைகள் ஆகும். பவுல் அப்போஸ்தலன் கூற்றுப்படி நம்மீதுள்ள இயேசுவின் அன்பு, பிறரிடம் நாம் அன்பில் வழியில் நடக்க ஏவுகிறது. (எபேசியர் 5:2)

நமது பிதாவின் அன்பு பிறரிடம் பொறுமையாகவும், அன்பாகவும் நடந்து கொள்ள நமக்கு உதவுகிறது. ஒருவரையொருவர் நேசித்தல் என்ன என்பது பற்றி தேவன் அவரின் குமாரனின் மூலமாக சிறந்த மாதிரியைக் காட்டியுள்ளார்.