ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த் புகை வண்டி நிலையத்தில் ஒரு மனிதன் புகை வண்டியில் ஏறும்பொழுது கால் நழுவினதினால், அவனது கால் புகை வண்டியின் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டது. அவனுக்கு உடனே உதவிசெய்ய அநேக பயணிகள் முன்வந்தார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களது முழுபலத்தையும் பயன்படுத்தி, புகை வண்டியை பிளாட்பாரத்தைவிட்டு சாய்த்தார்கள். கால்மாட்டிக் கொண்ட மனிதன் விடுவிக்கப்பட்டான். புகை வண்டி பயணச் சேவைக்கான செய்தி தொடர்பாளரான டேவிட் ஹைனஸ் “ஒவ்வொரு மனிதனும் அவர்களது முழு சக்தியையும் கொடுத்தார்கள் மிகவும் படுகாயம் அடையவிருந்த ஒருவரை மக்களின் சக்திதான் காப்பாற்றியது” என்று ஒரு பேட்டியில் கூறினார்.

தேவனுடைய குடும்பத்தைக் கட்டும் அவருடைய திட்டத்திற்கு மனிதர்களுடைய சக்தி தேவையென எபேசியர் 4ல் வாசிக்கின்றோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவர் சிறப்பான வரத்தைக் கொடுத்துள்ளார். “அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கும் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது” (வச 16)

தேவனுடைய குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஓர் வேலை உண்டு பார்வையாளர்கள் யாரும் இல்லை. தேவனுடைய குடும்பத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அழுகிறோம், சிரிக்கிறோம், ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கிறோம், ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து ஊக்கப்படுத்துகிறோம். பாவத்தை விட்டு விலக ஒருவவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறோம். பரமபிதாவே இன்று உம்முடைய குடும்பத்திற்கு நான் எவ்வாறு உதவியாக இருக்க வேண்டும் என்பதை எனக்குக் காண்பித்தருளும்.