டாக்டர் பிரையன் கோல்டுமேன் அவரது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிறிதுகூட தவறு இழைக்காமல் செயல்பட வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் செயல்பட்டார். ஆனால் தேசீய அளவில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில் அவர் செய்த தவறுகளை ஒத்துக் கொண்டார். அவர் ஒரு பெண்ணிற்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தவுடன், அவளை வீட்டிற்கு அனுப்ப தீர்மானித்ததை வெளிப்படையாகக் கூறினார். அந்த நாளின் பின் பகுதியில் ஒரு செவிலியர் “நீங்கள் வீட்டிற்கு அனுப்பின அந்தப் பெண் பற்றி ஞாபகம் வைத்துள்ளீர்களா? அந்தப் பெண் திரும்ப வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள் என்று அவரிடம் கூறினார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த நோயாளி மரித்துவிட்டாள். இந்த நிகழ்ச்சி அவரை நிலைகுலைய வைத்தது. அன்றிலிருந்து மேலும் குறைவில்லாமல் செயல்படக் கடினமாக முயற்சி செய்தார். ஆனால் இவ்வுலகில் தவறில்லாமல் செயல் படவே முடியாது என்று கற்றுக் கொண்டார்.
கிறிஸ்தவர்கள் குறையே அற்றவர்களாக வாழ கடுமையாக முயற்சிக்கலாம். குற்றமற்ற வாழ்க்கை வாழ்வது போல வெளிப்படையான வாழ்க்கை வாழ்ந்தாலும், நமது எண்ணங்கள், நோக்கங்கள் ஒருக்காலும். குற்றமில்லாத சுத்தமாக இருக்க முடியாது “நமக்குப் பாவமில்லை… நமக்குள் இராது” (1 யோவான் 1:8) என்று யோவான் சீஷன் எழுதியுள்ளான். நமது பாவங்களை மறைக்க கடினமாக முயற்சி எடுப்பது அதற்கான நிவாரணமல்ல. தேவனுடைய சத்தியமாகிய ஒளிக்குள் வந்து நமது பாவங்களை அறிக்கையிடுவதே அதற்குரிய நிவாரணமாகும். “அவர் ஒளியிலிருக்கிறது போல… நம்மைச் சுத்திகரிக்கும்”
(வச. 7)
நமது தவறுகளை ஒப்புக் கொள்ளத் தயக்கம் காட்டும் இக்காலத்தில், குற்றமேயில்லாமல் செய்ய வேண்டும் என்று பாடுபடாதவர்களே “நன்னடத்தையுள்ள மருத்துவர்” என்று கோல்டுமேன் தன் கருத்தைக் கூறுகிறார். அப்படிப்பட்ட மருத்துவர் திறந்த மனதுடன் தவறுகளை ஒத்துக் கொள்வதோடு அவ்வாறு செய்யும் மற்ற மருத்துவர்களையும் ஆதரிக்கிறார். இதன்மூலம் குற்றங்கள் குறைக்கப்படுகின்றது.
கிறிஸ்தவர்கள் அவர்களது பாவங்களை மறைக்காமல் தேவனுடைய சத்தியம் கிருபையின் மூலம் ஒருவரையொருவர் தாங்குகிறவர்கள் என்று அறியப்படுவது எவ்வளவு சிறந்த காரியமாக இருக்கும். செயல்பட கடினமான காரியமாக இருந்தாலும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலகத்தில் நடைமுறைக்கேற்ற உண்மையான வாழ்க்கையை செயல்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.