இரண்டு கட்டிடப் பணியாளர்களிடம் அவர்கள் என்ன கட்டிக் கொண்டிருக்கிறார்களென்று கேட்கப்பட்டது. ஒருவன் கார் நிறுத்தும் இடத்தை கட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். மற்றவன் ஒரு பேராலயத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறேன் என்றான். அடுத்தநாள், ஒரு மனிதன் மட்டும் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருந்தான். அடுத்த மனிதன் எங்கே என்று அவனிடம் கேட்கப்பட்டபொழுது, “அவன் வேலையிலிருந்து நீக்கப்பட்டான். கார் நிறுத்துமிடம் கட்டுவதற்குப் பதிலாக ஒரு பேராலாயம் கட்ட வேண்டும் என்று கூறிக் கொண்டே இருந்தான்” என்று அந்த மனிதன் பதில் கூறினான்.
இதைப் போலத்தான் ஆதியிலே பாபேல் கோபுரம் கட்டப்பட்ட இடத்தில் நடந்தது. ஒரு கூட்ட மக்கள் ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் ஒரு கோபுரத்தையும் கட்ட வேண்டுமென்று தீர்மானித்தார்கள். (ஆதி 11:4) பரலோகத்தை தொடக்கூடிய உயரத்திற்கு கோபுரத்தைக் கட்டினால் அவர்களது பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள இயலும் என்ற சுயபெருமையுடன் அக்கோபுரம் கட்டப்பட தேவன் விரும்பவில்லை. ஆகவே தேவன் வானத்திலிருந்து இறங்கி அவர்களது பாஷையை தாறுமாறாக்கி “பூமியின் மீதெங்கும் அவர்களை சிதறடித்து பல்வேறு பாஷைகளை பேச வைத்தார்” (வச. 8-9).
ஜனங்களுடைய பிரச்சனைகளுக்கெல்லாம் தேவனே தீர்வு அருள இயலும் என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ள அவர் விரும்பினார். தேவன் அவர்களுக்கான திட்டத்தை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தினார். (ஆதி 12:1-3) விசுவாசத்தினால் ஆபிரகாம் அவன் சந்ததியாரின் விசுவாசத்தால் “தேவனால் கட்டப்பட்ட நகரத்திற்காக” (எபிரேயர் 11:8-10) உலகத்தார் எப்படி எதிர்நோக்கி இருக்க வேண்டுமென்பதை காண்பித்தார்.
நம்முடைய சொந்தக் கனவுகள், தீர்வுகள் மூலமாக நமது விசுவாசம் வளராது. விசுவாசத்திற்குரிய அஸ்திபாரம் தேவனும், அவர் நமக்குள்ளும் நம் மூலமாக அவர் செய்யக் கூடிய செயல்களிலும் உள்ளது.