50 ஆண்டுகளாக, டேவ் பௌமேன் அவருக்குச் சொந்தமான பல் மருத்துவ சோதனைக் கூடத்தில் பணி செய்த பின், மனநிம்மதியோடு ஓய்வுத் பெற தீர்மானம் பண்ணினார். அவர் சர்க்கரை நோயாளியாகவும், இருதய அறுவை சிகிச்சை செய்தவருமாக இருந்தபடியினால், வேலையிலிருந்து ஓய்வு பெறுவதில் உறுதியாயிருந்தார். ஆனால் சூடானிலிருந்து வந்திருந்த வாலிப அகதிகளைக் குறித்து கேள்விப்பட்டவுடன் பௌமேன் அவரது வாழ்க்கையையே மாற்றியமைக்க கூடிய தீர்மானத்தை எடுத்தார். அவர்களில் 5 பேரை தாங்கி ஆதரவளிக்க முன் வந்தார்.

சூடானிய வாலிபர்களைப் பற்றி டேவ் நன்கு அறிந்தபொழுது அவர்கள் மருத்துவரிடமோ அல்லது பல் மருத்துவரிடமோ ஒரு பொழுதும் சென்றதே கிடையாது என்பதை அறிந்து கொண்டார். ஒருநாள் ஆலயத்தில் ஒருவர் “ஒரு அவயவம்… கூடப் பாடுபடும்” (1 கொரி 12:26) இந்த வசனத்தைக் கூறினார். பௌமேனுக்கு அந்த வசனத்தை மறக்கவே முடியவில்லை. அந்த சூடானிய கிறிஸ்தவர்கள் மருத்துவ உதவி ஏதுமில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யும்படி பௌமேனுடன் தேவன் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் செய்ய வேண்டியது என்ன?

அவரது வயதையும், சுகவீனத்தையும் பொருட்படுத்தாமல் சூடானில் ஒரு மருத்துவமையம் கட்டுவதற்குரிய காரியங்களைக் குறித்து ஆழமாக சிந்தித்து வந்தார். அவரைப்போல எண்ணங்கொண்டிருந்த மக்களையும் தேவையான பண வசதிகளையும் தேவன் கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்தருளினார். 2008ம் ஆண்டு கிறிஸ்தவ மெமோரியல் மருத்துவமனை நோயாளிகளுக்கென திறக்கப்பட்டது. அன்றிலிருந்து நூற்றுக்கணக்காக நோய்வாய்ப்பட்டவர்களும், காயம்பட்டவர்களும் அங்கு மருத்துவ உதவி பெற்று வருகின்றனர்.

ஜனங்கள் துன்பத்தை அனுபவிக்கும் பொழுது தேவன் அவர்களைக் குறித்து கரிசனைப்படுகிறார் என்பதற்கு மெமோரியல் கிறிஸ்தவ மருத்துவமனை ஒரு ஞாபகச் சின்னமாகவுள்ளது. நமது பணி முடிந்து விட்டது என்று நாம் எண்ணும்பொழுது நம்மைப் போன்ற மக்கள் மூலமாக தேவன் அவரது அன்பையும் இரக்கத்தையும் பிறருக்கு காண்பிக்க விரும்புகிறார்.