வாகனங்களின் அணிவகுப்பு புறப்படக் காத்திருந்த பொழுது, ஓர் இளம் கடற்படை வீரன் அவனது அதிகாரியின் வாகனத்தின் ஜன்னலை வேகமாகத் தட்டினான். எரிச்சலடைந்த அந்த அதிகாரி அவனது வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி ‘என்ன’? என்று கேட்டான்.

“நீங்கள் செய்ய வேண்டிய அந்தக் காரியத்தை செய்ய வேண்டும்” என்று அந்த கடற்படை வீரன் கூறினான். “என்ன காரியம்”? என்று அந்த அதிகாரி கேட்டான். “நீங்கள் எப்பொழுதும் செய்வீர்களல்லவா அந்தக் காரியம்” என்று அந்த கடற்படைவீரன் கூறினான்.

அந்த அதிகாரிக்கு அப்பொழுதுதான் மனதில் தோன்றியது, அதாவது அவன் தனது கடற்படையின் பாதுகாவலுக்காக எப்பொழுதும் ஜெபிப்பான். ஆனல் இந்தமுறை ஜெபிக்கவில்லை. உடனே அவன் வாகனத்திலிருந்து இறங்கி தனது கப்பற்படை வீரர்களுக்காக ஜெபித்தான். அந்த கப்பற்படை வீரன் அந்த அதிகாரியின் ஜெபத்தின் வல்லமையை அறிந்திருந்தான்.

யூதாவின் ராஜாவாகிய அபியா தலைசிறந்த ராஜாவாக இருக்கவில்லை. “அவனது இருதயம் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாக இருக்கவில்லை” என்று 1 இராஜாக்கள் 15:3 நமக்குச் சொல்லுகிறது. யூதா இஸ்ரவேலுக்கு எதிராக யுத்தம்பண்ண ஆயத்தமான பொழுது, அவர்களது எதிராளிகள் இரண்டு மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், அவனது யூத ராஜ்ஜியத்திலுள்ள மக்கள் தேவனை தொடர்ந்து ஆராதித்து வந்தார்கள் என்பதையும்
(2 நாளா. 13:10–12), இஸ்ரவேலின் பத்து கோத்திரத்தார் கர்த்தருடைய ஆசாரியர்களை விரட்டிவிட்டு அன்னிய தேவர்களை வணங்கி வந்தார்கள் (வச.8–9), என்பதையும் அறிந்திருந்தான். ஆகவே அபியா உண்மையான ஓரே தேவனிடம் நம்பிக்கையோடு திரும்பினான்.

அபியா சரியான முறையில் செயல்படாமல், நன்மையும், தீமையுமாக வாழ்ந்தான். ஆனால் இக்கட்டான சமயத்தில் யாரிடம் திரும்பவேண்டுமென்று அறிந்திருந்தான். அவன் தேவனிடம் திரும்பினதினால், அவனது இராணுவம் வெற்றி பெற்றது. ஏனென்றால், “அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்து இருந்தார்கள்” (2 நாளா. 13:18). நமது தேவன் அவரை நம்பி அவரண்டை வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அன்புடன் அழைக்கிறார்.