அது மாலைமங்கும் நேரம், நான் இன்னும் எனது கணணியில் எமது இணையத்தளத்திற்கு உடனடியாக தேவைப்படுகின்ற ஒரு கட்டுரையைத் தொகுத்துக்கொண்டிருந்தேன். எனது மகன் தனது விளையாட்டுகாரை மிகசத்தமாக தரையில் உருட்டிக்கொண்டிருந்தான், அது எனக்கு அவனுடன் சேர்ந்து இன்று மாலை விளையாட எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதனை நினைவூ ட்டியது. அதுமட்டுமல்ல, எனது கணவரும் தங்கையும் வீடுதிரும்பும் முன்னர் இரவு உணவை திட்டமிட்டுத்தயார் செய்யவும்வேண்டும்.
செய்யவேண்டியதைக் குறித்த எனது நீண்டுக்கொண்டே செல்கின்ற பட்டியலின் அடுத்த காரியத்தைப் பார்ப்பதற்குப்பதிலாக எனது நண்பர்கள் அண்மையில் வாசித்த புத்தகத்தை குறித்தான அறிவிப்பை சமூகவலைத்தளத்தில் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அச்சமயத்தில் திடீரென ஒரு குறிப்புமின்னியது, அதாவது நான் கடந்தவருடம் மொத்தமாக 19 புத்தகங்களைதான் வாசித்துள்ளேன்.
நான் ஒரு புத்தகப்பூச்சி என்று எனக்கே தெரியும். இந்த எண்ணிக்கையைப் பார்த்ததும் நம்பமுடியாதிருந்தது. அதாவது மெதுவாக நகரும்காலங்களில் கூட நான் இதுபோன்று இருமடங்கு புத்தகங்களைவாசிக்கக்கூடியதாக இருந்தது. 2019 இல் ஏன் இவ்வளவு குறைவான புத்தகங்கள்?
அடுத்த இரண்டு மூன்றுகிழமைகளுக்கு இதேகேள்விதான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதுமாத்திரமல்ல, நான் எனது நேரத்தை எவ்வாறு செலவளித்தேன் என்பதை குறித்தும் அதிககவனம் செலுத்தத் தொடங்கினேன். அதற்கான காரணத்தை நான் கண்டுபிடிக்க அதிகநேரம் செல்லவில்லை. நான் வேலை நேரத்தில் குறித்தவேலையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தொடர்சியாக சமூகவலைத்தளங்களின் செய்திகளைப் பார்ப்பதால், வழமையைவிட அவ்வேலையை முடிப்பதற்கு அதிகநேரத்தை எடுத்திருந்தேன். இந்த நிறுத்தங்கள் நான் திட்டமிட்டதைவிட “நிறுத்தம் செய்து” அதிக நேரத்தைசெலவிடலுக்கு வித்திட்டதுமட்டுமன்றி எனது உளவலிமையையும் வீழ்ச்சியுறச்செய்தது.
இந்த புதியபுரிதலுக்குப் பதில் செய்வதற்காக ஒரு காலைப்பொழுதில், நல்லதொரு விலையுயர்ந்த ஒரு ஊர் காபிகடையில் எனது எதிர்வரும் காலங்களில் எனது காலநேரத்தை எவ்வாறு பிரயோஜனப்படுத்திக்கொள்வது என்பதைக் குறித்துத் திட்டமிட்டேன். வினைத்திறனான சிலசெயற்பாடுகளைகுறித்து எனக்கு திருப்த்தியாயிருந்தது. இவற்றை தினமும் நினைவிற்குக் கொண்டுவருவதற்காக சுருக்கமாக அவற்றை எழுதிகணனியில் ஒட்டிவைத்தேன்.
முதல் நாளில் மட்டும் அவற்றைச் சிறப்பாகப் பின்பற்றக்கூடியதாக இருந்தாலும் ஒருவாரத்தில் மீண்டும் பழைய பழக்கங்களுடனோடென்பதை உணர்ந்தேன். சிலசந்தர்ப்பங்களில் நான் காலப்பதிவு செய்வதனை மறந்ததோடு எனது கணனியைவிட்டு தூரமாகச்சென்று சமூகவலைத்தளத்தில் நேரம்செலவளித்தேன். எனது ஆராய்ச்சிவேலைகளில் ஈடுபடத்தொடங்கியதும் இதனைவிட்டு சற்றுதிசைதிருப்பப்பட்டேன். சிலநாட்கள் சிறப்பாக நகர்ந்தன. அத்தகைய நாட்களிலும் கூட என்னுடைய நேரத்தை சிறந்தமுறையில் கழித்தேன் எனக்கூறமுடியாது.
ஏவ்வாராயினும் இன்னும் நான் கவனச்சிதறலுக்கு அடிமையாகவே காணப்படுகிறேன். என்னுடைய அனைத்து முயற்சிகளும் சிறிதளவு மாற்றத்தையே உருவாக்கியிருக்கிறது.
சங்கீதம் 51ஐ நான் ஒருநாள் வாசிக்கும் வரைமட்டுமே இப்பழக்கம் தொடர்ந்துகாணப்பட்டது. இது தாவீது விபச்சாரம் மற்றும் கொலைசெய்தபின் எழுதியமனந்திரும்புதலின் சங்கீதமாகும். இதிலுள்ள ஒருவசனம் என் மனதைத் தொட்டது.
“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் ; நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங்கீதம் 51:10).
என்னை ஒருகனம் சிந்திக்கவைத்த காரியம் யாதெனில் தாவீது தனது பாவத்தைச் சுயமாகச் சரிசெய்ய நினைக்கவில்லை. எதிர்காலத்தில் தன்னை மாற்றிக்கொள்வதற்கான வாக்குறுதிகளையும் எடுக்கவில்லை. அவர் தேவனிடத்தில் திரும்பி தேவன் தன் உள்ளத்தைமாற்றுமாறு தேவகிருபையையேநாடினார்.
எனது நேரமுகாமைத்துவசவாலில், நான் எனது சுய இயலுமையைக் கருத்தில்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்திவேலைகளை செய்துமுடிக்க யதார்த்தமான நடவடிக்கைகள் மற்றும் இலக்குகளை உருவாக்கினேன். எனினும் அவை ஒன்றுமேசரிவரச் செயல்படவில்லை. தாவீது நன்றாய் அறிந்த ஒன்றை நான் மறந்துவிட்டேன். தேவன் மன்னிப்பவர் மாத்திரமல்ல, சுத்தமான ஒரு இருதயத்தை எம்மில் உருவாக்கவும், உறுதியாய் நிலைநிற்கும் ஆவியை எம்மில் புதிப்பிக்கவும் வல்லவர்;.
அன்று மாலை, நான் எனது கணனியில் ஒரு புதிய குறிப்பை ஒட்டிவைத்தேன். நினைத்திருந்த நடைமுறைச் செயற்பாடுகளுக்கு பதிலாக சங்கீதம் 51:10ஐ பிரதிசெய்து எனது தனிப்பட்ட ஜெபமாக மாற்றிக்கொண்டேன். நான் வேலைசெய்கையில், இணையத்தில் நேரம் செலவிடுகையில், என்னுடைய கண்கள் இயல்பாகவே அக் குறிப்பைப் பார்க்கும். “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்”.
உங்களுக்குதெரியுமா? அன்றைய மாலைப்பொழுதின் வேலைகள் தனிச்சிறப்பாக அமைந்தன. கடந்த வருடங்களில் ஒரு விடையத்தில் கவனம் செலுத்தகடினப்பட்ட எனக்கு அது இயலுமையாக மாறியது. வேலைகள் விரைவாகமாத்திரமல்ல, சிறப்பாகவும் முடிந்தது. துணிசலவை, வீட்டுவேலைகள், எனது மகனை மைதானத்திற்குக் கொண்டுசெல்ல மற்றும் சுவையான இரவு உணவுதயார் செய்ய, எனக்குநேரம் மிகுதியாகக் காணப்பட்டது.
இரண்டு வாரம் இவ்விதமாய் கடந்துவிட்டன. ஒரு சில நீண்ட வேலைசெய்யும் நாட்களும் காணப்பட்டன. இரவு உணவு தயார்செய்யத் தாமதமான நாட்களுமுண்டு. எனினும் ஒட்டுமொத்தமாக பார்ப்பின் எனக்கு அதிகளவில் நேரம் இருந்தது. மற்றும் நான் செய்யும் வேலைகள் தரமானதாகவும் மாற்றமடைந்துள்ளன.
விடயம் என்னவெனில் நான் எனது நேரத்தை எனது சுய பெலத்தினால் வினைதிறனாகச் செலவிடுவதற்கான பல திட்டங்களையிட்டேன். இறுதியில் அனைத்திலும் தோல்வியுற்றேன். நான் சுயமாக இதனைச் செய்யமுடியாது எனத்தோன்றியதும், தேவன் இடைப்படுவதை நாடினேன். எனது ஜெபம் தேவன் என் உள்ளத்தை மாற்றமுடியும், அதனால் என் கவனச்சிதறலை சரிசெய்வார், நான் எனது வேலைகளில் கவனம் செலுத்தலாம் என்று நான் ஜெபித்தேன். என்னால் கூடாதகாரியத்தை நன்றாகச்செய்ய என்னை மாற்றும்படிகேட்டுக்கொண்டேன்.
தேவன் கிருபையாக எனது விண்ணப்பத்தைக் கேட்டார். அவரின் கிருபையினால் மட்டுமே என்னால் நன்றாக வேலைசெய்யமுடிந்தது, என் நேரத்தையும் சரியாகச் செலவுசெய்ய இயலுமானது.
தேவனால் இருதயங்களை மாற்றமுடியும் என்பதற்கான ஒரு புதிய நினைவூட்டும் அனுபவமானது
அவர் தாவீதிற்கு சுத்தமான இருதயத்தைத் சிருஷ்டித்தார். அவர் என்னுடைய இருதயத்தைக் கடந்த நாட்களிலும் கூட அதிசயமானவிதத்தில் புதுப்பித்தார். தேவன் தொடர்ந்தும் எனது இருதயத்தை புதுப்பிப்பார், எனது பாவங்களிலிருந்து மீள எனக்கு உதவுவார் என்று நம்புகிறேன். அப்பொழுது ஒருநாள் நான் கர்த்தருடைய சந்நிதானத்தில் குற்றமற்றவனாக மிகவும் களிகூர்ந்துகாணப்படுவேன் (யூதா 24).
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் போராடும் காரியங்களுண்டா? ஏதேனும் காரியத்திலிருந்து விடுதலைபெறமுடியாதிருக்கிறதா? உங்களுக்கும் புதியதோர் இருதயத்தைத் தரும்படியாக தேவனிடம் கேளுங்கள்.
மாற்றம் ஒரு இரவில் நடப்பதல்ல. எனது சில ஜெபங்களுக்கு தேவன் பதிலலிக்க ஆரம்பிக்கவே அநேக வருடங்களாகியுள்ளன. எனினும் காத்திருக்கும்போதும் கூட அவரை நம்பமற்றும் அவரைச் சார்ந்திருக்க தேவனிடம் உதவிகேட்கலாம். நாம் தள்ளாடிமீண்டும் விழும்போது கூட தேவன் எம்மைத் தொடர்ந்து வனைந்துகொண்டேயிருக்கிறார். அவர் நம்மை அனுதினமும் புதிதாக்குவார் என்பதை நாம் அறிவோம். நாம் தொடர்ந்து ஜெபிக்கவேண்டும், தினம் தினம் அவர் நம்மைப் புதுப்பிப்பார் என்பதை நாம் தொடர்ந்து நம்பவேண்டும். தேவன் மனமாற்றத்தை உண்டுபண்ணுபவர். எமக்குள் மனமாற்றத்தை உண்டுபண்ணவே அவர் விரும்புகிறார். நாம் செய்யவேண்டியகாரியம் அவரிடம் கேட்பதே.