ஒரு மீட்பர் இருந்தார். | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

ஒரு மீட்பர் இருந்தார்.

ஒரு மீட்பர் இருந்தார்.

No student enrolled

பகுதி 1 – பூரண சமாதானம்

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன்இ என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். யோவான் 14:27

பல வருடங்களாக சமாதானத்தையூம் மனத்திருப்தியையூம் தேடிக்கொண்டிருப்பதாக ஒரு நண்பி என்னிடம் பகிர்ந்துகொண்டாள். அவளும்இ அவளது கணவரும் ஒரு வெற்றிகரமான வியாபாரத்தைக் கட்டியெழுப்பிஇ அதனால் ஒரு பெரிய வீடுஇ ஆடம்பரமான உடைகள்இ மற்றும் விலை உயர்ந்த நகைகள் என்று அனைத்தையூம் அவளால் வாங்க முடிந்திருந்தது. ஆனால் இந்த உடைமைகளோஇ அல்லது செல்வாக்கு மிக்கவர்களுடனான அவளது நட்புறவூகளோ சமாதானத்திற்கான அவளது உள்ளார்ந்த தேடலைப் பூர்த்தி செய்யவில்லை. பின்னH ஒருநாள்இ அவள் மிகவூம் மனச்சோர்வடைந்து விரக்தியான நிலையில் இருந்தபோதுஇ ஒரு நண்பி இயேசுவின் நற்செய்தியைக் குறித்து அவளுக்குக் கூறினாள். இதோ அவள் சமாதானத்தின் பிரபுவான இயேசுவைக் கண்டடைந்ததோடுஇ உண்மையான சமாதானம் மற்றும் மனத்திருப்தி தொடர்பான அவளுடைய புரிதலானது நிரந்தரமாக மாற்றமடைந்தது.

தமது மரணம்இ உயிர்த்தெழுதல்இ பரிசுத்த ஆவியின் வருகை போன்ற நடக்கவிருந்த சம்பவங்களுக்குத் தமது நண்பர்களைத் தயார்படுத்தியபோதுஇ அவHகளுடைய இறுதி இராப்போஜனத்திற்குப் பின்பதாக இயேசு தமது நண்பர்களுடன் அந்த மெய்யான சமாதானத்தைக் குறித்துப் பேசினார் (யோவான் 14). உலகம் கொடுக்கிற சமாதானம் போலல்லாது மெய்யான சமாதானத்தைக் குறித்து அவர்களுக்கு விபரித்த இயேசுஇ துன்பங்களின் மத்தியிலும் நல்வாழ்வைக் கண்டடைவது எவ்வாறு என்பதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் விரும்பினார்.

அதன் பின்புஇ இயேசுவின் மரணத்தின் பின்னர் பயந்துபோயிருந்த சீஷHகளுக்கு முன்பாக உயிHத்தெழுந்த இயேசு தோன்றியபோதுஇ “உங்களுக்குச் சமாதானம்” (யோவான் 20:19) என்று சொல்லி அவHகளை வாழ்த்தினார். இப்போதுஇ அவர் எமக்காகச் செய்துமுடித்த கிரியையின் நிமித்தமாக இளைப்பாறுதலைப் பற்றிய ஒரு புதிய புரிதலை அவர்களுக்கும்இ நமக்கும் அவரால் கொடுக்கமுடிந்தது. நாம் அவ்வாறு செய்யூம்போதுஇ எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் நமது உணர்வூகளைவிட மிகவூம் ஆழமான ஒரு நம்பிக்கையின் விழிப்புணர்வை நாம் கண்டுகொள்ள முடியூம்.

நமது வாழ்விலும்இ உலகிலும் சமாதானத்தை கொண்டுவருவதற்காகவே இயேசு வந்தார்.