ஓப்புரவாக்குதலின் ஊழியம்
1957ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையில் டாக்டர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் பிரசங்கிக்கும் பொழுது, இனவாதத்தில் மூழ்கியிருந்த சமூகத்திற்கு பதிலடி கொடுக்கும்படி தனக்குள் எழும்பிய சோதனைக்கெதிராய் போராடினதை பிரசங்கித்தார்.
அப்பொழுது அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமெரி (Montogomery) என்னும் இடத்தில், டெக்ஸ்டர் சாலை பாப்டிஸ்ட் சபையில் கூடியிருந்தோரைப் பார்த்து “உங்களுடைய சத்துருக்களை எப்படி நேசிக்கிறீர்கள்?” என்று கேட்டு “அதைப் உங்களிலிருந்து தொடங்குங்கள்… எப்படியெனில் உங்கள் எதிரியை தோற்கடிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது, அப்படி செய்யாதிருங்கள்” என்ற பதிலை கூறினார்.
மேலும் அவர் இயேசுவின்…
தனிமையான காலம்
கிறிஸ்மஸ் முடிந்து வந்திருந்த அநேக தபால்களின் மத்தியில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டேன். அது பழைய உபயோகப்படுத்தப்பட்ட அட்டையில் வரையப்பட்ட ஒரு கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை. சாதாரண வாட்டர் கலரினால் வரையப்பட்ட குளிரான மலைப்பிரதேசமும், பசுமையான மரங்களும், கீழ்ப்பாகத்தின் நடுவில், சிவந்த பெர்ரி பழங்களுடன், ஹாலி இலைகளினால் ஆன கட்டத்துக்குள் “உனக்கு சமாதானம்!” என்று எழுதப்பட்ட செய்தியும் இருந்தது.
இதை வரைந்தவர் ஒரு சிறைக் கைதி. அவர் என்னுடைய நண்பர். அவருடைய கைவண்ணத்தை ரசித்தவாறே, அவருக்கு கடிதம் எழுதி இரண்டு ஆண்டுகள் ஆயிற்று என்பதை நினைவு…
செய்யுளின் ஏழாவது சரணம்
1861ம் ஆண்டு கோடைக்காலத்தில் ஹென்ரி வர்ட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோவின் மனைவி பிரான்செஸ் ஒரு தீ விபத்தில் சிக்கி மரித்துவிட்டாள். அவர் மனைவி இறந்தபின் முதல் கிறிஸ்மஸ்ஸில் சொல்லமுடியாத வருத்தமான உணர்வுகளால் இந்த விடுமுறை நிறைந்துள்ளது” என்று அவர் அவரது நாட்குறிப்பேட்டில் எழுதினார். அடுத்த ஆண்டிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. “மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி எனக்கு இனிமேல் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
1863ம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டுப் போர் மெதுவாக ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. லாங்ஃபெல்லோவின் மகன் அவரது விருப்பத்திற்கு மாறாக…
ஏமாற்றத்திற்கு அப்பால்
அவனுக்கு மேலும் ஒரு சகோதரி கிடைக்கப்போகிறாள் என்பதை அறிந்த சிறுவனைப் பற்றிய வீடியோவை ஒரு வேளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவன் மனமுடைந்த நிலையில் “எப்பொழுதும் பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்று புலம்பினான்.
இந்தக் கதை மனிதர்களுடைய எதிர்பார்ப்புகளைப்பற்றிய ஒரு வெளிப்பாட்டைத்தருகிறது. ஆனால் ஏமாற்றம் அடைவதில் எந்த ஒரு வேடிக்கையும் இல்லை. இது நமது உலகத்தையே முழுவதும் நிரப்பிவிடுகிறது. வேதாகமத்திலுள்ள ஒரு நிகழ்ச்சி ஏமாற்றங்களால் நிறைந்திருக்கிறது. யாக்கோபு அவனுடைய எஜமானின் மகள் ராகேலைத் திருமணம் செய்வதற்காக 7 ஆண்டுகள்…
சக்திவாய்ந்த பின்லாந்து வீரர்கள்
தீமை ஏற்பட இருக்கிறது என்பதற்கான முன் அறிகுறி ஏதும் இல்லாமல் அந்த சத்தம் தொடர்ச்சியான மெல்லிய ஒலியாகக் கேட்டது. பின்பு ஆபத்து வருவதற்கு அறிகுறியாக பூமியே அதிரத்தக்கதாக தட, தட வென்ற இரைச்சலாக மாறியது. விரைவில் நூற்றுக்கணக்கான இராணுவ கனரக வண்டிகளும், ஆயிரக்கணக்கான காலாட் படை வீரர்களும், மிகக்குறைந்த எண்ணிக்கை உடைய பின்லாந்து வீரர்கள் முன் திரள் கூட்டமாக கூடி வந்தார்கள். அவர்களது கொலை வெறியைக் கருத்தில் கொண்ட, ஒரு பெயர் அறிவிக்கப்படாத பின்லாந்து வீரர் கருத்தாழமிக்க சில அறிவுரைகளைக் கூறினான். எதிராளிகளின் எண்ணிக்கையைக்…
உள்ளத்தில் பெருமை
“அவன் தன்னைத்தானே மிகவும் பெரியவனாக எண்ணுகிறான்.” அது, நாங்கள் அறிந்துள்ள ஓர் உடன் கிறிஸ்தவனைப் பற்றிய எனது சிநேகிதனின் கருத்தாகும். அவன் பெருமையின் கூடிய ஆவியை உடையவனாக அவனைக் காண்கிறோம் என்று நாங்கள் எண்ணினோம். வெகு சீக்கிரத்தில் அவன் தவறான சில செயல்களுக்காக பிடிபட்டான் என்பதை அறிந்த பொழுது மிகவும் மன வருத்தம் அடைந்தோம். அவன் தன்னைத்தானே உயர்த்தினபடியினால் உபத்திரவத்தைத்தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. அதே நிலைமை நம் அனைவருக்குமே ஏற்படலாம் என்பதை உணர்ந்து கொண்டோம்.
நமது இருதயங்களிலுள்ள பெருமை என்ற பயங்கரமான…
நம்மிடம் பழங்கள் உண்டு
ஒரு இளம் தாயார் பெருமூச்சுடன் அவளது மூன்று வயது மகளுக்கான மதிய உணவைப் பாத்திரத்திலிருந்து சுரண்டி எடுத்துக் கொண்டிருந்தாள். அவளது சிறிய சமையல் அறையிலிருந்த மேஜையின் மேல் இருந்த காலியான பழக்கூடையைப்பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே “ஒரு கூடை நிறைய நமக்குப் பழங்கள் இருந்தால் பணக்காரனைப் போல உணருவேன்” என்று சத்தமிட்டுக் கூறினாள். அவளது சிறியமகள் அதைக் கேட்டாள்.
வாரங்கள் கடந்தன ஆயினும் தேவன் அச்சிறிய குடும்பத்தைப் பராமரித்து வந்தார். வறுமையினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த இளம் தாய் மிகவும் கவலைப்பட்டாள். பின்பு ஒரு…
மெல்லிழைத்தாள் பெட்டிகள் (TISSUE BOXES)
அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் அறையில் நான் அமர்ந்திருந்தபொழுது, சிந்திப்பதற்கு எனக்கு நேரம் கிடைத்தது. மிக இளம் வயதுடைய எனது ஒரே சகோதரனுக்கு “மூளைச்சாவு” ஏற்பட்டுவிட்டது என்ற துக்ககரமான செய்தியை நான் கேள்விப்பட்டு ஒருசில நாட்களுக்கு முன் இதைப்போலவே காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன்.
அதுபோல இந்த நாளில் மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை உட்பட்டிருந்த, எனது மனைவியைப் பற்றிய செய்திக்காக அதே காத்திருப்பு அறையில் காத்துக் கொண்டிருந்தபொழுது, எனது மனைவிக்கு நீண்ட பெரிய கடிதம் ஒன்று எழுதினேன். மனக்கலக்கத்துடன் கூடிய உரையாடல்கள் ஏதுமறியாத பிள்ளைகள் இவர்களால்…
பரிபூரணத்தின் கொடுமை
டாக்டர் பிரையன் கோல்டுமேன் அவரது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிறிதுகூட தவறு இழைக்காமல் செயல்பட வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் செயல்பட்டார். ஆனால் தேசீய அளவில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில் அவர் செய்த தவறுகளை ஒத்துக் கொண்டார். அவர் ஒரு பெண்ணிற்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தவுடன், அவளை வீட்டிற்கு அனுப்ப தீர்மானித்ததை வெளிப்படையாகக் கூறினார். அந்த நாளின் பின் பகுதியில் ஒரு செவிலியர் “நீங்கள் வீட்டிற்கு அனுப்பின அந்தப் பெண் பற்றி ஞாபகம் வைத்துள்ளீர்களா? அந்தப் பெண் திரும்ப வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள் என்று…