எச்சரிப்பின் சப்தங்கள்
நீங்கள் எப்போதாவது ஒரு விரியன் பாம்பினை அருகில் பார்த்ததுண்டா? அப்படியானால், நீங்கள் அருகில் செல்லும்போது, அதின் சத்தம் மிகவும் உக்கிரமாக இருப்பதை கவனித்திருக்கக்கூடும். ஆபத்துகள் தன்னை நெருங்கும்போது, பாம்புகள் பொதுவாக சத்தமிடும் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன என்ற ஆராய்ச்சி சொல்லுகிறது. இந்த அதிர்வலைகள், அவைகள் இருக்கவேண்டிய இடத்தைக் காட்டிலும் மிக நெருக்கமாக இருக்கின்றன என்பதை அவைகளுக்கு தெரியப்படுத்துகின்றன. ஒரு ஆராய்ச்சியாளர், “கேட்பவர் தவறான எல்லைக்குள் வந்துவிட்டதாக, தனக்கு ஒரு பாதுகாப்பு விளிம்பை ஏற்படுத்திக்கொள்கிறது" என்று சொல்லுகிறார்.
சண்டையிடும்போது, மற்றவர்களை திட்டும் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கும்போது, அதிக ஓசை எழுப்பக்கூடும். இதுபோன்ற தருணங்களுக்கு உகந்த வகையில் நீதிமொழிகளின் ஆசிரியர் ஞானமான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (நீதிமொழிகள் 15:1). மேலும் மென்மையான பதில், “ஜீவவிருட்சம்” என்றும் “அறிவை இறைக்கும்” (வச. 4,7) என்றும் சொல்லுகிறார்.
நாம் யாருடன் சண்டையிடுகிறோமோ, அவர்களிடம் தன்மையாய் பேசுவதற்கான முக்கியமான காரணத்தை இயேசு சொல்லுகிறார்: நாம் அவருடைய பிள்ளை என்பதை வெளிப்படுத்தும் அன்பை பிரதிபலிப்பதின்; மூலமாகவும் (மத்தேயு 5:43-45) மற்றும் நல்லிணக்கத்தைத் தேடுதலின் மூலமாகவும் (18:15) அது சாத்தியமாகும். சச்சரவுகளின் போது நம் குரலை உயர்த்தியோ அல்லது கனவீனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் தம்முடைய ஆவியின் மூலம் நம்மை வழிநடத்துவது போல் மற்றவர்களுக்கு நாகரீகம், ஞானம் மற்றும் அன்பைக் காட்டுவோம்.
பேரழிவால் அசைக்கப்படுதல்
1717ஆம் ஆண்டு வடக்கு ஜரோப்பாவில், ஒரு மாபெரும் புயல் வீசியது. நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் டென்மார்க் போன்ற தேசங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதில் பாதிக்கபட்ட ஒரு தேசத்தின் அரசாங்கம் ஆச்சரியமான தீர்மானத்தை எடுத்ததென வரலாறு தெரிவிக்கிறது. குரோனிஞ்சன் தேசத்தின் நகர அதிகாரிகள், இந்தப் பேரழிவின் காரணமாக “ஜெப நாள்” ஒன்றை ஒழுங்குசெய்தனர். ஜனங்கள் அனைவரும் திருச்சபையில் கூடி, “பிரசங்கங்களை கேட்டு, பாடல்களை பாடி, மணிக்கணக்காய் ஜெபித்தனர்” என்று ஒரு சரித்திர நிபுணர் பதிவுசெய்கிறார்.
யோவேல் தீர்க்கதரிசியும், அனுமதிக்கப்பட்ட பேரழிவினை சந்தித்து தேவ சமுகத்தில் மன்றாடிய ஜனங்களைக் குறித்துக் குறிப்பிடுகிறார். திரள்கூட்ட வெட்டுக்கிளிகள் தேசத்தைச் சூறையாடி, “அது என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து” பாழாக்கியது (யோவேல் 1:7). யோவேலும் அவருடைய ஜனங்களும் இந்தப் பேரழிவினால் ஆழ்ந்த துயரத்திற்குள்ளாகி, “கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்” (யோவேல் 1:19) என்று உதவிக்காய் கெஞ்சினர்.
நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாவத்தின் காரணமாகவும் விழுந்து போன இவ்வுலகத்திநிமித்தமும், வட ஐரோப்பியரும், யூதரும் பேரழிவை சந்திக்க வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 3:17-19; ரோமர் 8:20-22). அந்தத் தருணங்களில் தேவனை நோக்கிப் பார்த்து ஜெபிப்பதே சரியானதென்பதை அறிந்து செயல்பட்டனர் (யோவேல் 1:19). தேவன் அவர்களைப் பார்த்து, “ஆதலால் நீங்கள் இப்பொழுதே ... உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” (2:12) என்று சொன்னார்.
நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளையும் பேரழிவுகளையும் நாம் சந்திக்க நேரிட்டால், கண்ணீரோடும் மனந்திரும்புதலோடும் தேவனிடத்திற்குத் திரும்பக்கடவோம். அவர் “இரக்கமும்” “மிகுந்த கிருபையுமுள்ளவர்” (வச. 13), நம்மை அவரிடமாய் சேர்த்துக்கொண்டு, நமக்குத் தேவையான ஆறுதலையும் உதவியையும் நமக்கு அருளுவார்.
என்ன ஒரு கண்டுபிடிப்பு!
ரேஷ்மாவின் கண்கள் ஒரு பழங்கால டிரஸ்ஸிங் டேபிளில் பதிய, அவள் அதை விருப்பத்துடன் வாங்கினாள். அதின் டிராயரைத் திறந்தபோது, அதில் ஒரு தங்க மோதிரமும், சில குடும்பப் புகைப்படங்களும், அதின் பின்னால் பெயர், இடம் மற்றும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. மோதிரத்தை கண்டெடுத்த அவள், அதின் உரிமையாளரிடம் ஒப்படைக்க விரும்பினாள். புகைப்படத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைக் கண்டுபிடிக்க எண்ணிய ரேஷ்மா, முகநூலைப் பயன்படுத்தினாள். உரிமையாளரைக் கண்டுபிடித்த, அவள் அந்த மோதிரத்தை திருப்பி ஒப்படைத்தபோது, அந்த மோதிரம் தனது குடும்பத்தின் பாரம்பரிய சொத்து என்றும், இழந்த மோதிரத்தைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் உரிமையாளர் கூறினார்.
2 இராஜாக்கள் 22:8இல், இல்க்கியா “கர்த்தருடைய ஆலயத்தில் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டபோது” ஒரு அசாதாரணமான காரியத்தை கண்டுபிடித்தார் என்று வாசிக்கிறோம். “கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக” (வச. 5) ஜோசியா ராஜாவால் அறிவுறுத்தப்பட்டதால், அதை பழுதுபார்க்கும் முயற்சியில் அங்கிருந்த உபாகம புத்தகத்தைக் கண்டெடுத்தனர். “ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது” அவர் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார் (வச. 11). யூதேயாவிலுள்ள திருச்சபையைப் போலவே, தேவனையும் அவர் அருளிய வேத வசனங்களைப் படிப்பதும் கீழ்ப்படிவதும் மக்களால் புறக்கணிக்கப்பட்டது. மனந்திரும்பிய ராஜா, ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை அகற்றி, தன் தேசத்தை சீர்திருத்தத்திருக்கு வழிநடத்தினான் (23:1-24).
இன்று தேவனுடைய ஞானத்தையும் போதனையையும் வெளிப்படுத்தும், உபாகமம் புத்தகத்தையும் சேர்த்து 66 புத்தகங்கள் நமது வேதாகமத்தில் இடம்பெற்றுள்ளது. அவற்றைப் படிக்கும்போதும், கேட்கும்போதும், பரிசுத்த ஆவியானவர் நம் மனதை மாற்றி, நம் வழிகளைச் சீர்திருத்துவார். இன்று வேதாகமத்தின் வாழ்க்கையை மாற்றும் கதையில் மூழ்கி, வாழ்நாள் முழுவதும் ஆராய்வதற்கான ஞானத்தைக் கண்டறிவோம்.